நமிதா மாரிமுத்துவோட வலிய உணர முடியுது.. பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர் உருக்கம்!

சென்னை: பிக்பாஸ் நமிதா மாரிமுத்துவின் வலி என்ன என்பதை உணர முடிகிறது என பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Bigg Boss 5 வீட்டின் முதல் சண்டை | Namitha உணர்வுகளை மதிக்காத Thamarai selvi

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் குறித்து சக போட்டியாளர்களும் ரசிகர்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் தங்களின் வாழ்க்கை அனுபவங்களையும் தான் பட்ட கஷ்டங்களையும் கூறி வருகின்றனர்.

வலிகளை கண்ணீருடன் கூறிய நமிதா மாரிமுத்து

வலிகளை கண்ணீருடன் கூறிய நமிதா மாரிமுத்து

அந்த வகையில் திருநங்கை நமிதா மாரிமுத்து நேற்றைய எபிசோடில் தான் வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள், துன்பங்கள் மற்றும் பெற்றோராலும் உறவினர்களாலும் தான் பட்ட வலிகளை கண்ணீர்மல்க கூறினார். மற்ற போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் நமிதா மாரிமுத்து பேசுவதற்கு பிக்பாஸே அதிக நேரம் கொடுத்தார்.

கண்கள் கலங்கிய ரசிகர்கள்

கண்கள் கலங்கிய ரசிகர்கள்

கதறியப்படி நமிதா மாரிமுத்து கூறிய கதையை கேட்ட சக போட்டியாளர்கள் கண்கள் கலங்கினர். இதேபோல் பார்வையாளர்களையும் கலங்க வைத்தது நமிதா மாரிமுத்துவின் கதை. இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் இரவே ட்ரென்ட்டானார் நமிதா மாரிமுத்து.

பிரபலங்கள் பலரும் ஆதரவாக கருத்து

பிரபலங்கள் பலரும் ஆதரவாக கருத்து

சோஷியல் மீடியாவில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். நமிதா மாரிமுத்துவின் பேச்சால் ஒட்டு மொத்த திருநங்கை சமுதாயத்தின் நல் மதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றனர்.

நமிதாவின் வலியை உணர முடிகிறது

நமிதாவின் வலியை உணர முடிகிறது

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளரான பாலாஜி முருகதாஸ், நமிதா மாரிமுத்துவுக்கு ஆதரவாக டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, நமிதா மாரிமுத்துவின் வலியை உணர முடிகிறது. நமீதா நீங்கள் மாற்றம் என்ற விதையை விதைத்துள்ளீர்கள்.. எல்லோரும் மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

வெறுக்கப்பட்ட பாலாஜி முருகதாஸ்

வெறுக்கப்பட்ட பாலாஜி முருகதாஸ்

பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். சக போட்டியாளரான ஆரியை டார்கெட் செய்து அவர் நடந்து கொண்ட விதம், ஆரியை அடிக்க பாய்ந்தது, ஆரி குறித்து மற்ற போட்டியாளர்களிடம் தவறாக பேசியது மற்றும் ஆரியிடம் தரக்குறைவாக நடந்து கொண்டது போன்ற காரணங்களால் அதிகம் வெறுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X