குறைந்தபட்சம் நாலாவது பாட்டாவாவது வாத்தி கம்மிங் போட்டு இருக்கலாம்.. எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் பிரபலம்

சென்னை: மே மாதம் 10ஆம் தேதியில் இருந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டார். இவரது பதவியேற்பில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது. அதற்கு முன்னதாக தேசிய கீதமும் அதன் பின்னர் வந்தே மாதரம் ஒலிக்கப்பட்டது. மூன்றாவதாக தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இது பெரும் பேசு பொருளாக மாற, இணையத்தில் பலரும் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

திமுக கூட்டணி கட்சியினர், திமுக ஐ.டி. விங் என பல தளங்களில் இது தொடர்பாக மிகவும் சீரியஸாக விவாதங்கள் நடைபெற்றது. இதையடுத்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அளித்த விளக்கம் பலருக்கும் பதிலாக அமைந்தது. அதாவது, தாய்த் தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படுவதில் தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. ஆளுநர் மாளிகை அலுவலர்களிடம் இது தொடர்பாக பேசப்பட்ட போது, இது விதி என்று கூறிவிட்டார்கள். அதே நேரத்தில் வரும் காலங்களில் தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்படும் என்று தெரிவித்தார்.

Could ve Played Vaathi Coming Too Blue Sattai Maran s Post on CM Vijay Event Goes Viral

இவரது இந்த பதிலுக்குப் பின்னர் அரசியல் தளத்தில் இது தொடர்பான சீரியஸான விவாதம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. ஆனால் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இது தொடர்பாக பல ட்ரோல் போஸ்ட்களை பதிவேற்றி வந்தார்கள்.

ரசிகர்கள் வருத்தமா?: குறிப்பாக விஜய் ரசிகர்கள் மத்தியில் இது தொடர்பாக கேள்வி எழுப்பினால் அவர்கள் எப்படிப்பட்ட பதில்களை அளிப்பார்கள் என்று பலரும் பதிவிட்டு வந்தனர். ஒருவரோ, " சார் நாங்களே பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினால் பாட்டு போடலயேனு கவலையில் இருக்கிறோம், இப்ப வந்து தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் நான்காவது இடம் என்று கூறிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

வாத்தி கம்மிங்: இப்படி இருக்கையில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், " குறைந்த பட்சம் நான்காவது பாடலாக வாத்தி கம்மிங் போட்டிருக்கலாம்" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை பார்த்த இணையவாசிகள் பலரும் ப்ளூ சட்டை மாறனுக்கு நக்கல் தான் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X