தனுஷ், சிவகார்த்திகேயனுடன் மோதும் பஸ் டிரைவர் மகன்
சென்னை: பஸ் டிரைவர் மகன் நடித்த பிரமாண்ட படமான கே.ஜி.எஃப். நாளை ரிலீஸாக உள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ள கோலார் கோல்டு ஃபீல்டு(KGF) படம் நாளை பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது. இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
தனுஷின் மாரி 2, சிவகார்த்திகேயனின் கனா, ஜெயம் ரவியின் அடங்கமறு, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய தமிழ் படங்களுடன் சேர்ந்து நாளை ரிலீஸாக உள்ளது.

பெரிய பட்ஜெட்
கே.ஜி.எஃப். படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அனைவரும் வியக்கும்படி பிரமாண்டமாக ரிலீஸ் செய்யப்படுகிறது. கே.ஜி.எஃப். இரண்டு பாகங்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த படத்திற்காக யஷ் கடினமாக உழைத்துள்ளார்.

யஷ்
கன்னட நடிகராக இருந்தாலும் யஷுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் நிறைய உள்ளனர். கே.ஜி.எஃப். படத்தை அவர் பெரிய அளவில் விளம்பரம் செய்துள்ளார். மீடியாவே வியக்கும் அளவுக்கு பேட்டிகள் மேல் பேட்டிகள் கொடுத்துள்ளார். பேட்டிகளின் போது தான் ஒரு பெரிய ஸ்டார் என்ற பந்தா இல்லாமல் எளிமையாக இருந்த அவரின் குணம் மீடியாக்களுக்கு பிடித்துள்ளது.

பிரமிப்பு
கே.ஜி.எஃப். படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸை பார்த்து பாகுபலி புகழ் எஸ்.எஸ். ராஜமவுலியே அசந்து போயிருக்கிறார். இது கன்னட படம் என்பதை தாண்டி இந்திய மக்கள் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது என்று அவரே சர்டிபிகேட் கொடுத்துள்ளார். ராஜமவுலி கூறிய பிறகு படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சூப்பர் ஸ்டார்
ஒரு சாதாரண பஸ் டிரைவரின் மகனான யஷ் இன்று கன்னட சூப்பர் ஸ்டாராகியுள்ளார். மகன் சூப்பர் ஸ்டாரானாலும் அவரின் அப்பா இன்னும் பஸ் தான் ஓட்டுகிறார். ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து வெற்றி பெற்றுள்ள யஷ் சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் பல ஏழை இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்படி உள்ளார். அத்தகைய யஷ் நடித்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

விஜய்
கன்னட ஹீரோ என்று லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். யஷ் சூப்பராக தமிழ் பேசுவார். அவருக்கு ரஜினியும், தளபதி விஜய்யும் மிகவும் பிடித்த தமிழ் நடிகர்கள் ஆவார்கள். யூடியூப் பக்கம் போனாலே யஷ் பேட்டியாகத் தான் உள்ளது. அவரின் கடின உழைப்புக்கு பலன் கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











