சின்ன கல்லு பெத்த லாபம்.. சத்தமே இல்லாமல் வசூலை அள்ளும் ‘கப்பிள் ஃபிரண்ட்லி‘!

சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ந் தேதி வெளியானத் திரைப்படம்
'கப்பிள்ஸ் ஃப்ரெண்ட்லி'. நவீன காலத்து காதலையும், அதன் உணர்வையும் வெளிப்படுத்தி உள்ள இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்றை பெற்று வரும் நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

படத்தின் ஹீரோவான சந்தோஷ் சோபன் சென்னையில் இன்டீரியர் டிசைனிங் வேலை தேடிக்கொண்டே, பகுதி நேரமாக பைக் ரைடராகப் பணியாற்றி வருகிறார். அதேபோல, மானசா வாரணாசி ஐடி வேலையைத் தேடுகிறார். வேலை கிடைக்காத விஷயம் வீட்டிற்கு தெரிந்தால் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் என்ற பயத்தில் பொய் சொல்லிவிட்டு சென்னையில் இருக்கிறார். இவர்கள் இருவரும் எதிர்பாராதவிதமாக சந்திக்கும்போது, திருமணத்திற்கு முன்பே லிவிங் டுகெதர் முறையில் ஒரே வீட்டில் இணைந்து வாழ முடிவு எடுக்கின்றனர். அதன் பிறகு அவர்களின் வாழ்க்கையில் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் திருப்படங்கள் தான் கப்பிள் பிரண்ட்லி படத்தின் மீதிக்கதை.

'கப்பிள்ஸ் ஃப்ரெண்ட்லி': பீல் குட் ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் காதல் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் சந்தோஷ் சோபன் மற்றும் மானசா வாரணாசி இருவருமே எதார்த்தமானந நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த படத்திற்கு 'கப்பிள்ஸ் ஃப்ரெண்ட்லி' என பெயர் வைத்தால், இந்த படத்திற்கு 'ஏ' சான்றிதழ் தணிக்கை குழு வழங்கி இருப்பதாகவும், படத்தில் அதுபோன்ற எந்த காட்சியும் இல்லை என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

couple friendly box office
Photo Credit:

படத்தின் வசூல்: அஷ்வின் சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சந்தோஷ் சோபன்,மானசா வாரணாசி, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் வெளியான இப்படத்தை UV கான்செப்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் அஜய் வர்மா தயாரித்துள்ளார். பிப்ரவரி 14ந் தேதி வெளியான இப்படம் 10 நாட்களுக்குள் உலகளவில் ₹12.67 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் பத்து நாளில் 10 மடங்கு லாபத்தை பெற்றுள்ளது. தொடர்ந்து, படத்திற்கு பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதனால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X