twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சத்யராஜின் "தீர்ப்புகள் விற்கப்படும்" திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் தடை!

    |

    சென்னை: சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள தீர்ப்புகள் விற்கப்படும் திரைப்படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.

    Recommended Video

    சர்ச்சையான கதையின்னு ஒதுக்கிட்டாங்க |Theerpugal Virkapadum Audio Launch, MayilSamy, Dheeran

    தீரன் இயக்கத்தில், நடிகர் சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் "தீர்ப்புகள் விற்கப்படும்".

    காதலை மறக்காத யாஷிகா… பிக் பாஸ் வீட்டிற்கு திடீர் விசிட்... துள்ளிகுதித்து ஓடி வந்த நிரூப் !காதலை மறக்காத யாஷிகா… பிக் பாஸ் வீட்டிற்கு திடீர் விசிட்... துள்ளிகுதித்து ஓடி வந்த நிரூப் !

    இந்த படத்தை ஹனி பீ கிரேஷன்ஸ் இன் அசோஸியேஷன் வித் இன்ஃபினிட்டி ஃப்ரேம்ஸ் ப்ரோடக்ஷன்ஸ்" என்ற பொது பேனரின் கீழ் ஹனி பீ கிரேஷன்ஸ் உரிமையாளர் சஜீவ் மீரா சாஹிப் மற்றும் இன்ஃபினிட்டி ஃப்ரேம்ஸ் ப்ரோடக்ஷன்ஸ் உரிமையாளர் கே.கே. சுதாகரன் ஆகிய நிறுவனங்களின் கூட்டாக தயாரித்தனர்.

    24 ஆம் தேதி ரிலீஸ்

    24 ஆம் தேதி ரிலீஸ்

    இந்தப் படம் வரும் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. திரைப் பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த படத்திற்கு தற்போது ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    தயாரிப்பு பணியில் தாமதம்

    தயாரிப்பு பணியில் தாமதம்


    அதாவது கூட்டு ஒப்பந்தத்தின் படி இந்த படத்திற்காக இன்ஃபினிட்டி ஃப்ரேம்ஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் பணத்தை முழுமையாக முதலீடு செய்து, திரைப்படத்தின் ஆரம்பகட்ட முக்கியமான அனைத்து காட்சிகளையும் படமாக்கியது. இதன் தொடர்ச்சியாக, ஹனி பீ கிரேஷன்ஸ் நிறுவனத்திடம் பணம் இல்லாததால் தயாரிப்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.

    பெயர்கள் சேர்க்கப்படவில்லை

    பெயர்கள் சேர்க்கப்படவில்லை

    இதற்கிடையில், ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி அல்லாமல், இன்ஃபினிட்டி ஃப்ரேம்ஸ் ப்ரோடக்ஷன்ஸ் பெயரையும் இணை தயாரிப்பாளரான கே. கே. சுதாகரன் அவர்களின் பெயரையும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களில் சேர்க்காமல் ஹனிபீ கிரேஷன்ஸ் அவைகளை வெளியிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

    இரண்டு ஆண்டுகளாக வழக்கு

    இரண்டு ஆண்டுகளாக வழக்கு

    இதனையடுத்து இருதரப்புக்கும் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், இன்ஃபினிட்டி ஃப்ரேம்ஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது. சிவில் வழக்கும் மோசடி செய்ததற்கு கிரிமினல் வழக்கும் பதியப்பட்டுள்ளது. இந்த இரு வழக்குகளும் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

    ரிலீஸ் அறிவிப்பு

    ரிலீஸ் அறிவிப்பு

    இதற்கிடையில் சஜீவ் மீரா சாஹிப் மேற்கூறிய திரைப்படத்தின் மொத்த உரிமையையும் பங்குதாரரான கே. கே. சுதாகரன் அவர்களின் சம்மதம் இல்லாமல் சி.ஆர்.சலீம் (அல் டாரிஸ் மூவீஸ் உரிமையாளர்) என்பவரிடம் விற்று விட்டார். இது சட்ட விரோதமான மற்றும் அனுமதியற்ற உரிமை மாற்றலாகும். அல் டாரிஸ் மூவி தங்கள் பேனரின் கீழ் திரைப்படத்திற்கு தணிக்கையை பெற்று விட்டு இத்திரைப்படம் வருகிற டிசம்பர் 24, 2021 அன்று உலகளாவிய அளவில் தியேட்டர்களில் வெளியாகும் என போஸ்டர் மூலமாக அறிவித்துள்ளது.

    படத்தை ரிலீஸ் செய்ய உத்தரவு

    படத்தை ரிலீஸ் செய்ய உத்தரவு

    இதனிடையே இன்ஃபினிட்டி ஃப்ரேம்ஸ் ப்ரோடக்ஷன்ஸ் ஆலப்புழா மாவட்ட துணை நீதிமன்றத்தில் சஜீவ் மீரா சாஹிப் மற்றும் சி. ஆர். சலீம் எதிராக தொடுத்த வழக்கில் இரு பக்க வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் முடிவு எட்டும் வரைவரும் 24 வெளியாக இருந்த நிலையில் "தீர்ப்புகள் விற்கப்படும்" தமிழ் திரைப்படத்தை தியேட்டர்கள் மற்றும் ஓ.டி.டி. தளங்களில் வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டார்.

    English summary
    Court bans release of Theerpugal virkappadum movie. Sathyaraj staring in lead role in direction of Theeran.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X