அமிதாப் - ஐஸ்வர்யா ராய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

உத்தரபிரதேச முதல்வராக முன்பு முலாயம்சிங் இருந்த போது, தவுலத்பூர் என்ற இடத்தில் நடிகை ஐஸ்வர்யாராய் பெயரில் மகளிர் கல்லூரி தொடங்க அரசின் சார்பில் நிலம் ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பின்னர் அக்கல்லூரி தொடங்கப்படவில்லை.
கல்லூரிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்கவில்லை என்றும், இதில் மோசடி நடந்துள்ளதாகவும் கூறி நடிகர் அமிதாப்பச்சன், அவரது மருமகள் நடிகை ஐஸ்வர்யாராய், நிஷ்தா அறக்கட்டளை உள்ளிட்ட 8 பேர் மீது தவுலத்பூர் கிராம பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமாரி தலைமை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
போலீஸ் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்ததில் இந்த பிரச்சினையில் கிரிமினல் குற்றம் எதுவும் இல்லை என்றும், எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் கூறி ராஜ்குமாரியின் மனுவை மாஜிஸ்திரேட்டு சிவ்சந்த் யாதவ் தள்ளுபடி செய்தார்.
Comments
aishwarya rai amitabh bachan அமிதாப் பச்சன் ஐஸ்வர்யா ராய் தவுலத்பூர் நிலம் நில மோசடி மகளிர் கல்லூரி வழக்கு தள்ளுபடி davulatpur land purchase land cheating case women college


Click it and Unblock the Notifications