நடிகர் அர்னவ்வுக்கு நிபந்தனை ஜாமீன்..நாளை வெளியே வருவாரா?
சென்னை : நடிகர் அர்னவ்வுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளதால் விரைவில் வெளியே வரவுள்ளார்.
கேளடி கண்மணி சீரியல் சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை திவ்யா.
அர்னவை திருமணம் செய்து கொண்ட போட்டோவை திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, தான் கர்ப்பாமாக இருப்பதாகவும் கூறியிருந்தார். இதனால் , பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

நடிகை திவ்யா
நடிகை திவ்யா ஸ்ரீ தனது கணவர் அர்னவ், திருமணமான போட்டோவை நான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதில் இருந்தே என்னை டார்ச்சர் செய்து வருகிறார். செல்லம்மாள் சீரியலில் நடிக்கும் ஒரு நடிகையுடன் தொடர்புவைத்துள்ளார். இதை கேள்வி கேட்டதால்,கர்ப்பிணி என்றும் பார்க்காமல் தன்னை அடித்துவிட்டதாக நடிகை திவ்யா கதறி அழுதபடி புகார் கூறியிருந்தார்.

3 பிரிவுகளில் வழக்கு
நடிகை திவ்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் அர்னவ் மீது கொலை மிரட்டல் வன்புணர்வு உள்ளிட் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, அர்னவை விசாரனைக்கு ஆஜராகுமாறு பலமுறை அழைக்கப்பட்டார். ஆனால், அவர் ஆஜராகததால், போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.

15 நாள் காவல்
இதையடுத்து, படப்பிடிப்பில் இருந்த அர்னவை போலீசார் கைது செய்து, சுமார் இரண்டு மணிநேரம் விசாரணை நடத்திய பின் அம்பத்தூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். மேலும், அவரை வரும் 28ந் தேதிவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நடிகர் அர்னவ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

நிபந்தனை ஜாமீன்
நடிகர் அர்னவ், ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று பூவிருந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அர்னவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை குடும்ப வழக்காக பார்க்கவேண்டும் என்றும், குற்ற வழக்காக பார்க்கக்கூடாது என்றும் வாதிட்டார். இதையடுத்து அர்னவ்வுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் நாளை அர்னவ் விடுதலையாவார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











