உங்க வீட்டு புள்ளைய அடிப்பியா.. நடிகை ரஞ்சனா நாச்சியாருக்கு நீதிமன்றம் போட்ட கண்டிஷன்!

சென்னை: பேருந்தின் மேற்கூரையில் தொங்கியபடி சென்ற மாணவர்களை அடித்த நடிகை ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

நடிகை ரஞ்சதா நாச்சியார் பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளராக உள்ளார்.

அண்ணாத்த, டைரி, நட்பே துணை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், விஜய் டிவி புகழ் நடித்து வரும் படத்தையும் தயாரித்து வருகிறார்.

Court granted conditional bail to actress Ranjana Nachiyar

ரஞ்சனா நாச்சியார்: இவர் காரில் சென்று கொண்டிருந்த போது போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்தனர். இதனை கண்ட நடிகை ரஞ்சனா நாச்சியார் பேருந்தை வழி மறித்து, ஓட்டுநரை தரக்குறைவான வார்த்தையில் திட்டினார்.

கீழே இறங்குடா நாயே: மேலும், நடத்துரை ஒருமையில் பேசி, படிக்கட்டில் தொங்கிய மாணவர்கள் நாயே.. நாயே கீழே இறங்குடா... அறிவு இல்ல என கேட்டு மாணவர்ளை அடித்து, கையை பிடித்து இழுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதைப்பார்த்த பொதுமக்கள், தட்டி கேட்பது தப்பு இல்ல அதே மாதிரி அடிக்கிறதுக்கு யாருக்கும் உரிமை இல்ல. உங்க வீட்டு புள்ளைய இப்படி அடிச்சா வேடிக்கை பார்ப்பீங்களா என்று பல கமெண்ட்டுகள் இணையத்தில் பறந்தன.

ரஞ்சனா நாச்சியார் கைது : அதையடுத்து, நடிகை மீது காவல்நிலையத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் புகார் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாங்காடு போலீஸார் ரஞ்சனாவை கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் நடிகை ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Court granted conditional bail to actress Ranjana Nachiyar

நிபந்தனை ஜாமீன்: இதில் அவர் 40 நாட்கள் காலை மற்றும் மாலையில் மாங்காடு காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ரஞ்சனா நாச்சியாரை பாஜக நிர்வாகிகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X