twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீரா மிதுனுக்கு கிடைத்தது ஜாமீன்… ஆனாலும் வெளியே வரமுடியாது… இன்னொரு கேஸில் சிக்கல் !

    |

    சென்னை : சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக ஜோ மைக்கேல் என்பவர் தொடந்துள்ள வழக்கில் மீரா மிதுனுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

    மீரா மிதுனை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி கோரி இருந்தனர். ஆனால் நீதிமன்றம் காவல்துறையின் கோரிக்கையை நிராகரித்து மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கியது .

    ஜாமீன் வழங்கப்பட்டாலும், ஏற்கனவே உள்ள வழக்குகளில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், மீரா மிதுன் தொடர்ந்து சிறையில் இருப்பார்.

    வசமாக சிக்கும் மீரா மிதுன்.. காவலில் எடுத்து விசாரிக்க எம்.கே.பி நகர் போலீசார் முடிவு! வசமாக சிக்கும் மீரா மிதுன்.. காவலில் எடுத்து விசாரிக்க எம்.கே.பி நகர் போலீசார் முடிவு!

    மீரா மிதுன்

    மீரா மிதுன்

    மீரா மிதுன் என்றாலே சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் என்று எல்லோருக்கும் தெரியும். சமூக வலைத்தளங்களில் அவர் பதிவிடும் பதிவுகளும் சில சமயம் சர்ச்சை ஆவதுண்டு. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சேரன் தன்னை தகாத முறையில் தொட்டார் என பொய் புகார் கொடுத்த அவரை நெட்டிசன்கள் அப்போது இருந்தே ட்ரோல் செய்து வருகின்றனர்.

    ட்விட்டர் கணக்கு நீக்கம்

    ட்விட்டர் கணக்கு நீக்கம்

    மீரா எல்லைமீறி பதிவுகள் போட்டு வந்த நிலையில் அவரது ட்விட்டர் கணக்கும் நீக்கப்பட்டது. தற்போது இன்ஸ்டாகிராமில் மட்டும் இருக்கும் மீரா மிதுன் அவர் போடும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட் செய்ய முடியாத வகையில் தான் வைத்திருந்தார்.

    அவதூறு கருத்து

    அவதூறு கருத்து

    சமீபத்தில், பட்டியலின மக்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதனையடுத்து நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    தலைமறைவு

    தலைமறைவு

    இதனைத்தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்காக கடந்த 11 ஆம் தேதி நடிகை மீரா மிதுன் ஆஜராகுமாறு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில், நடிகை மீரா மிதுன் சம்மனை ஏற்று ஆஜராகவில்லை.

    கேரளாவில் கைது

    கேரளாவில் கைது

    போலீஸ் கைதுக்கு பயந்து கேரளாவில் தலைமறைவானவர் அங்கிருந்து வீடியோ போட்டு தொடர்ந்து திமிராக பேசி வந்தார். போலீசுக்கே சவால் விடுக்கும் வகையில் மீரா மிதுன் பேசி வந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி கேரளாவில் மீரா மிதுனும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டனர்.

    ஜாமீன் மறுப்பு

    ஜாமீன் மறுப்பு

    இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மீரா மிதுன் தற்போது புழல் சிறையில் உள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பெயிலுக்கு விண்ணப்பித்து இருந்தார். நான் சினிமாவில் நடிக்க நிறைய கால் ஷீட் கொடுத்துள்ளேன். என்னால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், வெளியில் சென்றால் சாட்சியை கலைக்க மாட்டேன், நான் வாய் தவறி பேசிவிட்டேன் என்னை மன்னித்து எனக்கு பெயில் வேண்டும் என்று மீரா மிதுன் கேட்டிருந்தார். ஆனால் நீதிமன்றமோ, நீங்கள் சிறைக்கு சென்று கொஞ்ச நாள்தான் ஆகிறது என்று கூறி பெயில் அளிக்க மறுத்துவிட்டது.

    நீதிமன்றத்தில் ஆஜர்

    நீதிமன்றத்தில் ஆஜர்

    இந்நிலையில் மீண்டும் மற்றொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். மீரா மிதுன் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் கூறி வருவதாக ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதன்படி, எழும்பூர் நீதிமன்றத்தில் மீரா மிதுன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

    மீரா மிதுனுக்கு ஜாமீன்

    மீரா மிதுனுக்கு ஜாமீன்

    இதையடுத்து, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக ஜோ மைக்கேல் என்பவர் தொடந்துள்ள அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட மீரா மிதுனுக்கு இன்று எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. போலீஸ் மீராவை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி இருந்தனர். ஆனால் நீதிமன்றம் காவல்துறையின் கோரிக்கையை நிராகரித்து மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கியது. அவதூறு வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டாலும், ஏற்கனவே உள்ள வழக்குகளில் மீரா தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், அதனால் அவர் தொடர்ந்து சிறையில் இருப்பார்.

    English summary
    Meera Mithun was produced in the Egmore court today. The police had sought permission from the court to take Meera Mithun into police custody for 2 days and interrogate her. But the court rejected the police's request and granted bail to Meera Mithun.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X