“வலிமை“க்கு தடை போடமுடியுமா?.. ஓடிடியில் வெளியாவது உறுதி.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !
சென்னை : அஜீத்தின் வலிமை படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிடுவதற்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
எச் வினோத் இயக்கத்தில் போனிகபூரின் தயாரிப்பில் அஜித்தின் மாறுபட்ட நடிப்பில் வெளியானத்திரைப்படம் வலிமை.
இத்திரைப்படத்தில் அம்மா, தம்பி செண்டிமென்ட் என மாஸ் காட்டி இருந்தார். மேலும் பைக் ரேஸ், ஆக்ஷன் காட்சிகள் என படம் தாறுமாறாக இருந்து பட்டையை கிளப்பியது.

மெட்ரோ கதை
வலிமை திரைப்படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள், 2016ல் வெளியான தனது "மெட்ரோ" படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக ஜே.கே.கிரியேஷன்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெ. ஜெயகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார். வசதியான வாழ்கைக்காக சங்கிலி பறிப்பது, போதைப் பொருள் கடத்தலில் தம்பிக்கு தொடர்புள்ளதை அறிந்து கொள்ளும் கதாநாயகன், கடைசியில் தம்பியை கொல்வது கிளைமாக்ஸ் இருக்கும் என்றும்.

நீதிமன்றத்தில் வழக்கு
இந்த படத்தி மற்ற மொழிகளில் தயாரிக்க திட்டமிட்டிலிருந்த நிலையில், அதே போன்று வெளியாகி உள்ள வலிமை படம் காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது எனவும், வலிமை படத்தை சாட்டிலைட் சேனல், ஓடிடி தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், வலிமை படம் ஓடிடியில் வெளியாவதற்கும் தடை கோலி ஜே.கே.கிரியேஷன்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெ. ஜெயகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தினமும் செய்தி தாளில் வரும் தகவல்
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, இயக்குனர் ஹெச். வினோத் தரப்பு பதில் மனுவை வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் தாக்கல் செய்தார். அந்த பதில் மனுவில், செய்தித்தாள்களில் தினமும் சங்கிலி பறிப்பு, போதைப்பொருள் கடத்தல், கொலை போன்ற செய்திகளின் அடிப்படையில் தான் வலிமை படம் உருவாக்கப்பட்டது.

காப்புரிமையையும் மீறவில்லை
மேலும், மெட்ரோ படத்தின் கதை, கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டதாக கூறுவது தவறு என்றும், எனவே எந்த காப்புரிமையையும் மீறவில்லை என்றும் பதில் மனுவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இணையதளங்களில் வெளியான விமர்சனங்களில் மெட்ரோவை ஒப்பிட்டு கூறப்படவில்லை என்றும், தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வழக்கு தாக்கல் செய்த ஜெயகிருஷ்ணனுக்கு எதிராக 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரி வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை நிராகரிக்க வேண்டும்
கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து வலிமை படத்தை, ஓடிடி தளங்களில் வெளியிடவும், சாட்டிலைட் உரிமை தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்றும், இந்நிலையில் தடை விதித்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால், மெட்ரோ படத் தயாரிப்பாளர் ஜெயக்கிருஷ்ணன் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என இயக்குனர் வினோத் தரப்பு வழக்கறிஞர் வாதித்தார்.

தடை இல்லை
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, வலிமை திரைப்படத்தை, ஓடிடி-யில் வெளியிட எந்த தடை இல்லை என்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பிரதான வழக்கின் விசாரணையை ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், திட்டமிட்டபடி, வலிமை மார்ச் 25ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











