twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரூ 65 லட்சம் கடனை தரவில்லை... கஸ்தூரி ராஜாவுக்கு சம்மன்!

    By Shankar
    |

    Court issues Summon to Kasturiraja
    சென்னை: பைனான்சியரிடம் வாங்கிய ரூ 65 லட்சம் கடனை திருப்பித் தராததால், செக் மோசடி வழக்கில் இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

    சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ராவிடம் ரூ 65 லட்சம் கடன் வாங்கியிருந்தார் கஸ்தூரிராஜா. இதற்கு ஈடாக கஸ்தூரிராஜா தந்த காசோலைகள் பணமின்றி திரும்பியதால், ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார் போத்ரா.

    அதில், "கஸ்தூரிராஜா ரூ. 65 லட்சம் கடன் வாங்கியிருந்தார். ஆனால் அந்த கடன் தொகையை திருப்பி தரவில்லை.

    மேலும் கடனுக்காக தரப்பட்ட 2 காசோலைகளும் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டு விட்டன. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு 8-வது மாஜிஸ்திரேட் விஜயராணி முன்பு விசாரணைக்கு வந்தது. செக் மோசடி வழக்கு விசாரணைக்காக வருகிற மார்ச் 4-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று கஸ்தூரிராஜாவுக்கு சம்மன் அனுப்ப மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

    English summary
    A Chennai court has ordered to send summon to film director Kasturiraja for not returned Rs 65 lakh to a financier.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X