சர்ச்சையில் சிக்கிய இரண்டாம் குத்து.. நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவால் இப்படி ஒரு சிக்கல்?

சென்னை: இரண்டாம் குத்து படத்தின் டீசரை நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடித்துள்ள இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகிறது.

இந்நிலையில், படத்திற்கு எதிரான வழக்கில் இப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் ரிலீசுக்கு பிரச்சனை உருவாகி உள்ளது.

ஆபாசமான ஃபர்ஸ்ட்லுக்

ஆபாசமான ஃபர்ஸ்ட்லுக்

ஆளுயர வாழைப் பழத்தை அந்த இடத்தில் பிடித்துக் கொண்டு, ஆபாசமாக இயக்குநரும் நடிகருமான சந்தோஷ் மற்றும் டேனி நடுவில் நாயகி மீனள் சாஹு பிகினி உடையில் படு செக்ஸியாக போஸ் கொடுத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கவுதம் கார்த்திக் வெளியிட்டு இருந்தார். அந்த போஸ்டரை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் கண்டபடி திட்டி கண்டனங்களை தெரிவித்தனர்.

இரண்டாம் குத்து டீசர்

இரண்டாம் குத்து டீசர்

ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களில் ஆபாச வசனங்களையும், ஆபாச காட்சிகளையும் வைத்து படம் இயக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார், நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், 4 ஹீரோயின்களுடன் புகுந்து விளையாடும் படு ஆபாசமான டீசர் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

ஏகப்பட்ட புகார்கள்

ஏகப்பட்ட புகார்கள்

ஆபாசத்தின் உச்சமான இரண்டாம் குத்து படத்தின் டீசரை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் மற்றும் அந்த படத்தின் நடிகர்களை கைது செய்ய வேண்டும் என ஏகப்பட்ட புகார்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் குவிந்தன. இது தொடர்பான வழக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரிக்கப்பட்டது.

அதிரடி உத்தரவு

அதிரடி உத்தரவு

இரண்டாம் குத்து படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. டீசரில், ஆண்குறி உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்று ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா?

திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா?

ஏ சர்டிபிகேட் பெற்று விட்டோம், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகப் போகிறோம் என இயக்குநர் சந்தோஷ் சமீபத்தில் அறிவித்து, தொடர்ந்து பாடல்களை ரிலீஸ் செய்து வரும் நிலையில், இப்படியொரு தீர்ப்பு வந்துள்ள நிலையில், திட்டமிட்டபடி தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகுமா? இல்லையா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X