twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    த்ரிஷா நிர்வாண குளியல் வீடியோ விவகாரம்: அம்மா உமாவுக்கு பிடிவாரண்டு

    By Shankar
    |

    சென்னை: நடிகை த்ரிஷா நிர்வாண குளியல் போட்டதாக வெளியான வீடியோ தொடர்பான வழக்கில் ஆஜராகாததால் அவரது அம்மா உமாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

    த்ரிஷா குளியல் காட்சி

    த்ரிஷா குளியல் காட்சி

    நடிகை த்ரிஷாவைப் போன்ற ஒரு பெண் ஓட்டல் அறை ஒன்றில் குளிப்பது போன்ற காட்சியொன்று 2004-ல் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    ரகசிய கேமிரா

    ரகசிய கேமிரா

    பாத்ரூமில் ரகசிய கேமராவை பொருத்தி இக்காட்சியை படமாக்கியதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தை வார பத்திரிகையொன்றும் வெளியிட்டது.

    மறுப்பு

    மறுப்பு

    ஆனால் த்ரிஷாவும், அவரது தாய் உமாவும் இதனை மறுத்தனர். படத்தில் இருப்பது த்ரிஷா இல்லை என்றும் மார்பிங்கில் போலியாக இப்படத்தை உருவாக்கியாதாகவும் கூறினர்.

    நஷ்ட ஈடு

    நஷ்ட ஈடு

    படத்தை வெளியிட்ட ஒரு வார பத்திரிகையிடம் நஷ்டஈடு கேட்டு உமா கிருஷ்ணன் எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    8 ஆண்டுகளாக

    8 ஆண்டுகளாக

    இந்த வழக்கு விசாரணை கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்தது. விசாரணைக்கு வருமாறு உமாகிருஷ்ணனுக்கு கோர்ட்டு பல தடவை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

    த்ரிஷாவுக்கு வாரண்ட்

    த்ரிஷாவுக்கு வாரண்ட்

    இதையடுத்து நீதிபதி கோபாலகிருஷ்ணன் த்ரிஷாவுக்கும், உமாகிருஷ்ணனுக்கும் கைது வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதனை உமாகிருஷ்ணன் வக்கீல் மறுத்து விளக்கம் அளித்துள்ளார்.

    உமாவுக்கு மட்டும்தான்

    உமாவுக்கு மட்டும்தான்

    அவர் கூறும்போது, ‘‘நீதிமன்றம் த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கவில்லை. அவரது தாய் உமாகிருஷ்ணனுக்கு மட்டுமே வாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதை சட்ட ரீதியில் எதிர்கொள்வோம்," என்றார்.

    English summary
    Chennai Egmore court has ordered warrant against Trisha's mother Uma in the actress's bathing video.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X