நடிகை மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும்.. நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 11ந் தேதிக்குள் மீரா மிதுனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாடல் அழகியான மீரா மீதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான. இதையடுத்து, சமூக வலைத்தளப் பக்கத்தில் தொடர்ந்து ஏதாவது சர்ச்சைக்குரிய செய்திகளை பகிர்ந்து வந்தார். தமிழ் சினிமாவில் உள்ள பட்டியலின இயக்குநர்கள் மற்றும் நடிகர் நடிகைகளை வெளியேற்ற வேண்டும் என்றும் சாதி வெறியுடன் பேசி இருந்தார் மீரா மிதுன். அவரது இந்த வீடியோ பரபரப்பை கிளப்பிய நிலையில் அவர் மீது தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் பதிவானது. மேலும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க என புகார் அளித்தார்.

Meera Mithun arrest

அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு காவல்துறையினர் கைது செய்தார்கள். புழல் சிறையில் அடைக்கப்பட்ட மீரா மிதுன் அதன் பின்னர், ஜாமீனில் வெளியே வந்த மீரா மீதுன், அதன் பின் நேரில் ஆஜராக வில்லை. மாறாக என்னை கைது செய்வது என்பது கனவில்தான் நடக்கும் என போலீசாருக்கே சவால் விடும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டு தலைமறைவானார்.

கடந்த 2021 ஆண்டு முதல் தற்போது வரை, 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில் அவரை கைது செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி மீரா மிதுனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X