twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொலை மிரட்டல் வழக்கு.. கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை.. மணிரத்னம் பட நடிகைக்கு பிடிவாரண்ட்

    |

    சென்னை: மாஜி நடிகை காயத்ரி சாய்க்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

    மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் எம் ஸ்வாமி மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார் முன்னாள் நடிகை காயத்ரி சாய்.

    காயத்ரி சாய் மீது கொலை மிரட்டல் வழக்கை பத்திரிகையாளர் பிரகாஷ் எம் ஸ்வாமி தொடுத்த நிலையில், விசாராணைக்கு ஆஜராகாமல் தட்டிக் கழித்து வரும் காய்த்ரி சாயை கைது செய்து அழைத்து வர போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    உங்க தலை எங்கன்னு கேட்ட ரசிகர்கள், விக்ரம் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவுடன் சீக்ரெட் சொன்ன காயத்ரிஉங்க தலை எங்கன்னு கேட்ட ரசிகர்கள், விக்ரம் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவுடன் சீக்ரெட் சொன்ன காயத்ரி

    அஞ்சலி படத்தில்

    அஞ்சலி படத்தில்

    இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 1990ம் ஆண்டு வெளியான அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் நடிகை காயத்ரி சாய். மிஸ் சென்னை சோஷியல் ஆக்டிவிஸ்ட் ரன்னர் அப் ஆன இவர் சினிமாவில் ஃபேஷன் டிசைனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் எம் ஸ்வாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

    புலனாய்வு கட்டுரை

    புலனாய்வு கட்டுரை

    சென்னையை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் எம் ஸ்வாமி(66). இவருக்கு எதிராக நடிகை காயத்ரி சாய்நாத்(55) என்பவர் பாலியல் குற்றச்சாட்டு கூறினார்.
    நடிகையின் கணவர் வெளிநாட்டில் இறந்தது குறித்து பிரகாஷ் எம் ஸ்வாமி புலனாய்வு கட்டுரை வெளியிட்டதால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    கொலை மிரட்டல்

    கொலை மிரட்டல்

    இதையடுத்து தன் சமூக வலைதளத்தில் பிரகாஷ் எம் ஸ்வாமிக்கு எதிராக நடிகை காய்த்ரி சாய்நாத் கருத்துகளை பதிவிட்டதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. நடிகைக்கு எதிராக பத்திரிகையாளர் அளித்த புகாரில் பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகை முன் ஜாமின் பெற்றார்.

    அவதூறு பரப்பினார்

    அவதூறு பரப்பினார்

    பின் சமூக வலைதளத்தில் பத்திரிகையாளருக்கு எதிராக அவதுாறு கருத்துகளை நடிகை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இது தொடர்பான வழக்கு கடந்த முறை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சமூக வலைதளத்தில் தனக்கு எதிராக நடிகை பதிவிட்ட ஆபாசமான கருத்துகளை நீதிபதியிடம் பத்திரிகையாளர் சமர்ப்பித்தார். வழக்கு விசாரணையின்போது நடிகை ஆஜராகாமல் இருந்தார்.

    பிடிவாரண்ட்

    பிடிவாரண்ட்

    இந்த நிலையில் வழக்கு சைதாப்பேட்டை 23வது மாஜிஸ்திரேட் கெளதமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அனைத்து ஆவணங்களை பார்த்த நீதிபதி ஜாமினில் வெளிவரக்கூடிய கைது வாரண்ட் பிறப்பித்து காய்த்ரி சாய்நாத்தை நவம்பர் 7ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

    English summary
    Court orders arrest warrant to actress Gayathri Sai in death threat case. She avoids to attend case hearings at Court so, the Court decides to send a bailable arrest warrant to her.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X