twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராம்லீலாவில் நடித்ததற்காக தீபிகா படுகோன், ப்ரியங்கா சோப்ரா மீது வழக்கு

    By Shankar
    |

    மும்பை: சஞ்சய் லீலா பன்சாலியின் ராம்லீலா படத்தில் நடித்த தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் மீது நீதிமன்ற உத்தரவுப்படி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    பிரபல பாலிவுட் பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, ராம்லீலா என்ற இந்தி சினிமா படத்தை சமீபத்தில் வெளியிட்டார்.

    ராமர் வாழ்க்கை

    ராமர் வாழ்க்கை

    இந்தப்படத்தில் ரன்வீர்சிங்- தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ளனர். ராம்லீலா என்ற வார்த்தை, ராமபிரானின் வாழ்க்கையை சித்தரிப்பதாகும். ஆனால் அந்த வார்த்தையைப் பெயராக வைத்து படம் எடுத்து, படத்தின் கரு இந்துக்களின் மத உணர்வுகளை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.

    இந்தப்படம் கடந்த 15-ந்தேதி உலகமெங்கும் வெளியானது. ஆனால் படம் வெளியாவதற்கு முன்பாகவே, படத்துக்கு எதிராக சிவசேனா கட்சி தொண்டர்கள், இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் கிளம்பி போராட்டங்கள் நடத்தினர். படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரினர்.

    பெயர் மாற்றம்

    பெயர் மாற்றம்

    இந்தப்படத்துக்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தலையிட்டு படத்துக்கு தடை விதித்தது. ஆனால் தடையில் இருந்து தப்பிக்கும் நோக்கத்தில் பட நிறுவனத்தினர், படத்தின் பெயரை ராம்லீலா என்பதற்கு பதிலாக கோலியோன் கி ராஸலீலா- ராம்லீலா என மாற்றினர்.

    தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தமில்லையே

    தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தமில்லையே

    இருப்பினும் இந்தப் படத்துக்கு எதிராக பரேய்லியில் உள்ள குற்றவியல் நீதித்துறை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வாஹன்பூர் என்ற இடத்தை சேர்ந்த கைலாஷ் சந்திரசர்மா என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், படத்தின் பெயருக்கும், படத்துக்கும் சம்மந்தம் இல்லை. படத்தில் வன்முறை, ஆபாசம் சித்தரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ராம்லீலா என்றால் அது ராமபிரானின் வாழ்க்கையைத்தான் குறிக்கும். இந்தப் படம் அப்படி இல்லை. இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் படம் அமைந்துள்ளது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு

    12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு

    மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு குப்தா, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரிக்குமாறு உள்ளூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து படத்தின் கதாநாயகன் தன்வீர்சிங், கதாநாயகி தீபிகா படுகோனே, படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடியுள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, படத்தை தயாரித்த ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கிஷோர் லுல்லா, படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 12 பேர் மீது இந்திய தண்டனைச்சட்டத்தின் பிரிவுகள் 295 (கே), 28, 500 ஆகியவற்றின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English summary
    The Bareily court has ordered to file a complaint on Director Sanjai Leela Bansali, actresses Deepika Padukone, Priyanka Chopra and 9 others in a petition against Ramleela movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X