பேட் கேர்ள்: மொத்தமும் ஆபாசம்.. டீசரை நீக்க நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பேட் கேர்ள்'. அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபள்ளி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 5ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், 'பேட் கேர்ள்' படம் பெரிய சர்ச்சையில் சிக்கி உள்ளது.
பேட் கேர்ள் திரைப்படத்தின் டிரைலர் ஜனவரி மாதம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த டிரைலரில், படத்தின் நாயகி, தன் இஷ்டத்திற்கு வாழ வேண்டும், என் விருப்பத்தின்படி வாழ வேண்டும் என்று சொல்லிக்கொண்டு ஆண் நண்பரை வைத்துக்கொள்வதை ஒரு கௌரவமாக கருதுகிறாள். அதுமட்டுமில்லாமல், அந்த ஆண் நண்பருடன் உடலுறவு வைத்துக்கொள்வது, டேட்டிங் செல்வது என அனைத்தும் பள்ளியில் படிக்கும் போது நடப்பது போல காட்சிகள் அமைந்து இருந்தது. இதைப்பார்த்த பலர், கொந்தளித்தனர். அதுமட்டுமில்லாமல், படத்தின் வரும் நாயகி பிராமணப் பெண்ணாக காட்டி இருந்தது, என பலத்தின் டிரைலர் வெளியானதுமே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

நீக்க வேண்டும்: தற்போது 'பேட் கேர்ள்' திரைப்படம் செப்டம்பர் 5ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், சங்கரன்கோவிலை சேர்ந்த ராம்குமார், ரமேஷ்குமார் உள்ளிட்ட மூன்று பேர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை கொடுத்துள்ளனர். அதில் டிரைலரில் சிறுவர், சிறுமிகள் குறித்து ஆபாசமான காட்சிகள் அதிக அளவில் உள்ளதாகவும் இது பாலியல் குற்றம் எனவே இந்த டீசரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கி, தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்க விசாரித்த நீதிபதி, யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் இருந்து 'பேட் கேர்ள்' படத்தின் டிரைலரை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இது போன்ற பதிவு ஏற்றங்களை நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதனால், படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











