சிம்பு – ஹன்சிகா பட விவகாரம்...கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
சென்னை : காதல் பிரேக் அப் ஆன பிறகு சிம்புவுடன் ஹன்சிகா மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் 'மகா'. இது ஹன்சிகாவின் 50 வது படமும் கூட. தற்போது ஹன்சிகாவிடம் கைவசம் இருக்கும் ஒரே படமும் இது தான்.
இந்த படத்தை யு.ஆர்.ஜமீல் இயக்கி உள்ளார். எக்ஸெட்ரா என்டர்டெயின்மென்ட் பேனரில் மதியழகன் இப்படத்தை தயாரித்துள்ளார். நாயகியை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

வழக்கு போட்ட டைரக்டர்
இந்நிலையில் தன்னை கேட்காமல் படத்தை முடித்து ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்து வருவதாகவும், தனது அனுமதியில்லாமல் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்றும் டைரக்டர் ஜமீல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

டைரக்டருக்கு உரிமையில்லை
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, படத்தின் உருவாக்கம், தலைப்பு உள்ளிட்ட எதிலும் இயக்குனருக்கு எந்த உரிமையும் இல்லை என ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார்.

நஷ்ட ஈடு வேணும்
அத்துடன் படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பாக டைரக்டர் ஜமீலுக்கு ரூ.5.5 லட்சம் சம்பளமாக கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த படத்திற்கு தனக்கு சம்பளம் மற்றம் நஷ்டஈடாக ரூ.10 லட்சம் தர வேண்டும் என ஜமீல் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தடை விதிக்க முடியாது
இந்த படத்தை ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்ற ஜமீலின் கோரிக்கையையும் கோர்ட் நிராகரித்தது. மேலும் இந்த வழக்கின் விசாரணை ஜுன் 28 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இருதரப்பும் எழுத்துப்பூர்வமாக வாதங்களை சமர்பிக்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











