twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குநர் சுசி கணேசன் அவதூறு வழக்கு... லீனா மணிமேகலை கோரிக்கை... செசன்ஸ் கோர்ட் நிராகரிப்பு

    |

    சென்னை : ட்விட்டரில் இயக்குநர் சுசி கணேசன் மீது மீ டூ விவகாரத்தில் இயக்குநர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து அவர்மீது வழக்கு தொடர்ந்த சுசி கணேசன், நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கை வேறு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி லீனா மணிமேகலை வழக்கு தொடர்ந்திருந்தார்.

    சுசி கணேசன் படத்தில் ஹீரோ வாய்ப்பு...குவிந்த வீடியோக்கள் சுசி கணேசன் படத்தில் ஹீரோ வாய்ப்பு...குவிந்த வீடியோக்கள்

    மீ டூ விவகாரம்

    மீ டூ விவகாரம்

    கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு மீ டூ விவகாரத்தில் திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் மீது இயக்குநர் லீனா மணிமேகலை ட்விட்டர் பக்கத்தில் புகார் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சுசி கணேசன் மீது பல தரப்பினரும் விமர்சனங்களை பதிவு செய்தனர்.

    சுசி கணேசன் வழக்கு

    சுசி கணேசன் வழக்கு

    இதையடுத்து சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்தரேட் நீதிமன்றத்தில் லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குநர் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்ந்து சைதாப்பேட்டை ஒன்பதாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நான்கு மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மாஜிஸ்திரேட்டை மாற்ற கோரிக்கை

    மாஜிஸ்திரேட்டை மாற்ற கோரிக்கை

    இதனிடையே இந்த வழக்கை சைதாப்பேட்டை 9வது மாஜித்திரேட் மோகனாம்பாள் விசாரிக்கக்கூடாது என்றும் வேறு மாஜிஸ்திரேட் வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லீனா மணிமேகலை வழக்கு தொடர்ந்திருந்தார்.

     வழக்கு தாமதம் என குற்றச்சாட்டு

    வழக்கு தாமதம் என குற்றச்சாட்டு

    இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக வழக்கு விசாரணையை லீனா மணிமேகலை இழுத்தடித்து வருவதாக சுசி கணேசன் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. மேலும் வழக்கை தாமதப்படுத்தும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

    உச்சநீதிமன்ற உத்தரவு

    உச்சநீதிமன்ற உத்தரவு

    நான்கு மாதத்தில் வழக்கை முடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவும் சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து லீனா மணிமேகலை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மாஜிஸ்திரேட்டிற்கு எதிராக கூறி வழக்க மாற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளதாக அவரது வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Sessions Court rejects Leena manimegalai's plea on Susi Ganeshan case
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X