twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டீசர், போஸ்டரை கண்ட இயக்குனர் அதிர்ச்சி.. பிரபல ஹீரோவின் 250 வது படத்துக்கு கோர்ட் இடைக்கால தடை!

    By
    |

    கொச்சி: பிரபல ஹீரோவின் 250 வது படத்துக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

    தமிழில், அஜித்தின் தினா, சமஸ்தானம், ஷங்கர் இயக்கிய ஐ உட்பட சில படங்களில் நடித்தவர் மலையாள ஹீரோ சுரேஷ் கோபி.

    இப்போது விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் படத்தில் நடித்துள்ளார்.

    சினிமாவுக்கு முழுக்கு..துபாயில் வேலை பார்க்கும் தமிழ் ஹீரோயின்..மாடர்ன் லுக்கில் ரணகள போட்டோஷூட்! சினிமாவுக்கு முழுக்கு..துபாயில் வேலை பார்க்கும் தமிழ் ஹீரோயின்..மாடர்ன் லுக்கில் ரணகள போட்டோஷூட்!

    வரனே அவஷியமுண்டு

    வரனே அவஷியமுண்டு

    கடந்த ஐந்து வருடங்களாக, படங்களில் நடிக்காமல் இருந்த சுரேஷ்கோபி, டிவி நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அதோடு அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த படம், 'வரனே அவஷியமுண்டு'. அனுப் சத்யன் இயக்கியுள்ள இந்தப் படத்தை துல்கர் சல்மான் தயாரித்து, நடித்துள்ளார். இதில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷோபனாவும் நடித்திருந்தார்.

    250 வது படம்

    250 வது படம்

    இதில் மேஜர் உன்னிகிருஷ்ணனாக வந்த சுரேஷ் கோபி கேரக்டர் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்தப் பட ஹிட்டுக்குப் பிறகு சுரேஷ் கோபி நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனர், மாத்யூஸ் தாமஸ் இயக்குகிறார். இது நடிகர் சுரேஷ் கோபிக்கு 250 வது படம். இதில், கடுவாகுன்னேல் குருவச்சன் என்ற மாஸ் கேரக்டரில் சுரேஷ் கோபி நடிக்கிறார்.

    ஜினு ஆப்ரஹாம்

    ஜினு ஆப்ரஹாம்

    அவரது பிறந்த நாளன்று கடந்த சில நாட்களுக்கு முன் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் டீசரையும் படக்குழு வெளியிட்டது. அதில் சுரேஷ் கோபி வெள்ளையும் கருப்பும் கலந்த தாடியுடன் கொஞ்சம் வயதான லுக்கில் இருக்கிறார். இதைக் கண்ட இயக்குனரும் ஸ்கிரிப்ட் டைரட்டருமான ஜினு ஆப்ரஹாம் அதிர்ச்சி அடைந்தார்.

    பிருத்விராஜ்

    பிருத்விராஜ்

    ஏனென்றால், இவர் கடுவா என்ற படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதியுள்ளார். அதில் பிருத்விராஜ் ஹீரோவாக நடிக்கிறார். ஷாஜி கைலாஷ் இயக்குகிறார். அதே கதையை போலவே இதன் டீசரும் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த, ஜினு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து நீதிமன்றம் சுரேஷ் கோபி படத்துக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

    உதவி இயக்குனர்

    உதவி இயக்குனர்

    இதுபற்றி ஜினு ஆப்ரஹாம் கூறும்போது, 2011 ஆம் ஆண்டில் இருந்து என்னுடன் உதவி இயக்குனராக இருக்கிறார் மாத்யூஸ். இந்த கதை உட்பட பல கதைகளை அவருடன் விவாதித்திருக்கிறேன். நான் என் படத்துக்கு கடுவாகுன்னெல் கருவச்சன் என்றுதான் டைட்டில் வைத்திருந்தேன். நீளமாக இருப்பதால், அதை சுருக்கி வைக்கச் சொன்னார் தயாரிப்பாளர் லிஸ்டன் ஸ்டீபன். அதனால் கடுவா என்று டைட்டில் வைத்தேன்.

    Recommended Video

    V-CONNECT | DESIGNER GOPI PRASANNA RECREATES THE OLD MOVIE POSTERS | FILMIBEAT TAMIL
    வழக்குத் தொடர்ந்தேன்

    வழக்குத் தொடர்ந்தேன்

    ஆனால், சுரேஷ் கோபி படத்துக்கும் அதே டைட்டிலை வைத்துள்ளனர். போஸ்டர், டீசரின் காட்சிகள், எனது கதையை போலவே இருப்பதால் வழக்குத் தொடர்ந்தேன்' என்று கூறியிருக்கிறார் ஜினு. சுரேஷ் கோபியும் பிருத்விராஜும் ஒரு ஜீப்பின் முன் பக்கத்தில் அமர்ந்திருப்பது போல போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருந்தன. கடுவா படத்தை இந்த மாத இறுதியில் தொடங்க இருந்தனர். ஜினு ஆப்ரஹாம், பிருதிவிராஜ், ஆண்ட்ரியா நடித்த லண்டன் பிரிட்ஜ், ஆதம் ஜான் படங்களை இயக்கி இருக்கிறார்.

    English summary
    Court ordered a stay on the shoot of Suresh Gopi’s 250th film and its promotions for alleged violation of copyright laws
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X