twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாதி பிரச்னையால் நடந்த கொலை.. சர்ச்சை இயக்குனரின் உண்மைச் சம்பவ படத்துக்கு கோர்ட் திடீர் தடை!

    By
    |

    ஐதராபாத்: பிரபல சர்ச்சை இயக்குனரின் உண்மைச் சம்பவப் படத்துக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

    Recommended Video

    COMPANY CEO நடிகை ஆன கதை | ACTRESS PRIYADARSHINI CHAT|FILMIBEAT TAMIL

    உண்மை சம்பவங்களை மையமாக வைத்து படம் இயக்குபவர், பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா.

    இந்த கொரோனா லாக்டவுனிலும் நேக்கட், க்ளைமாக்ஸ் ஆகிய கிளுகிளு படங்களை இயக்கி, தான் தொடங்கியுள்ள ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்தார்.

    சுஷாந்தை கொலை செய்தது இந்த 2 அப்பாக்கள்தான்.. ஜிம் பார்ட்னரின் பகீர் தகவலால் பரபரப்பு! சுஷாந்தை கொலை செய்தது இந்த 2 அப்பாக்கள்தான்.. ஜிம் பார்ட்னரின் பகீர் தகவலால் பரபரப்பு!

    உண்மைச் சம்பவம்

    உண்மைச் சம்பவம்

    அடுத்தும் 'த்ரில்லர்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையே அர்னாப் கோஸ்வாமி பற்றியும் படம் இயக்கப் போவதாகக் கூறியிருந்தார். அதற்கு முன், மர்டர் என்ற படத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இந்தக் கதை உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. அம்ருதா என்ற பெண்ணை பிரனாய் என்ற இளைஞர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

    கூலிப்படையால் கொலை

    கூலிப்படையால் கொலை

    சாதி பிரச்னை காரணமாக, அம்ருதாவின் தந்தை மாருதியால் இதை ஏற்க முடியவில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கூலிப்படையால் கொல்லப்பட்டார் பிரனாய். இந்தக் கொலை தொடர்பாக அம்ருதா தந்தை மாருதி ராவ் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் கடந்த மார்ச் மாதம், மாருதி ராவ் தற்கொலை செய்து கொண்டார். இது அப்போது பரபரப்பானது.

    அளவுக்கு மீறிய பாசம்

    அளவுக்கு மீறிய பாசம்

    இந்நிலையில், அம்ருதா மற்றும் மாருதிராவ் வாழ்க்கையை மையமாக வைத்து மர்டர் என்ற படத்தை உருவாக்கப் போவதாக ராம் கோபால் வர்மா அறிவித்திருந்தார். மகள் மீது அளவுக்கு மீறிய பாசத்தை அப்பா வைத்தால் என்னவாகும் என்பதை படத்தில் கூற இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு அம்ருதா கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்.

    வழக்குத் தொடர்ந்தார்

    வழக்குத் தொடர்ந்தார்

    மறைந்த பிரனாய் குடும்பத்தினருடன் வசித்து வரும் அம்ருதா, படத்துக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாகக் கூறியிருந்தார். இதையடுத்து பிரனாயின் தந்தை பாலசுவாமி நலங்கொன்டா சிறப்பு செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

    இடைக்கால தடை

    இடைக்கால தடை

    பிரனாய், அம்ருதா புகைப்படங்கள், அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், இந்த ஆணவக் கொலை தொடர்பான விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை, இயக்குனர் ராம் கோபால் வர்மா இந்தப் படத்தைத் தொடங்கக் கூடாது என்று இடைக்கால தடை விதித்தது.

    English summary
    The Nalgonda Special sessions court has ordered a stay on the film 'Murder' being produced by Director Ram Gopal Varma.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X