நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக அவதூறு- நடிகர் ராஜசேகர்- ஜீவிதாவுக்கு சம்மன்

பிரபல தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரும், அவருடைய மனைவி நடிகை ஜீவிதாவும் சமீபத்தில் ஒரு டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது, நடிகர் சிரஞ்சீவி நடத்தும் அறக்கட்டளையிலும், ரத்த வங்கியிலும் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாக குற்றம் சாட்டினர்.
இதனால் அவர்கள் மீது சிரஞ்சீவியின் மைத்துனரும், தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த், ஹைதராபாத் 17-வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, முதல் நோக்கிலேயே குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாக கருதியதால், ராஜசேகரும், ஜீவிதாவும் பிப்ரவரி 9-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
Comments


Click it and Unblock the Notifications