twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா தொற்றால் சுருண்ட சினிமா துறை.. இந்த வருடம் அத்தனை ஏமாற்றம்.. அடுத்த வருடம் மாறுமா?

    By
    |

    சென்னை: கொரோனா காரணமாக இந்த வருடம் சினிமாதுறை, மொத்தமாகச் சுருண்டு விட்டது.

    Recommended Video

    OTT தளத்தை எந்த சினிமாக்காரனும் விரும்ப மாட்டான் | ACTOR SANTHANAM | BISKOTH MOVIE | FILMIBEAT TAMIL

    எதிர்பார்க்கப்பட்ட படங்களின் ரிலீஸ் தள்ளிப்போனதாலும் பல படங்களின் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டதாலும் கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளது.

    தியேட்டர்கள் மூடப்பட்டதால், பல படங்களை ரிலீஸ் செய்ய முடியவில்லை. பாக்ஸ் ஆபிஸ் படுத்துவிட்டது.

    நேர்ந்த சோகம்

    நேர்ந்த சோகம்

    உலகம் முழுவதும் சினிமாதுறைக்கு நேர்ந்த சோகம் இது. இதற்கு முன் இப்படியொரு சூழலை சினிமாதுறை எதிர்கொண்டதில்லை. சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து, சந்தித்துள்ள முதல் அனுபவம் இது. உலகம் முழுவதும் பல படங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சரியாக போகவில்லை

    சரியாக போகவில்லை

    தமிழில், கடந்த ஜனவரியில் தொடங்கியது, இந்த வருட சினிமா. ரஜினியின் தர்பார் ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகிபாபு, நிவேதா தாமஸ் உள்பட பலர் நடித்த இந்தப் படம் வரவேற்பை பெற்றாலும் சில ஏரியாக்களில் சரியாக போகவில்லை என்று கூறப்படுகிறது.

    ஓ மை கடவுளே

    ஓ மை கடவுளே

    சில வினியோகஸ்தர்கள் பணத்தை திருப்பிக் கேட்டதாகச் செய்திகள் வெளியாயின. அடுத்து தனுஷின் பட்டாஸ் வெளியானது. பின்னர் வெளியான மிஷ்கின் சைக்கோ, சரத்குமார் நடித்த வானம் கொட்டட்டும், அசோக் செல்வன் நடித்த ஓ மை கடவுளே, துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹரீஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு ஆகிய படங்கள் கவனிக்க வைத்தன.

    ஓ மை கடவுளே

    ஓ மை கடவுளே

    இதில், உதயநிதி நடித்த சைக்கோ படம் ஹிட்டானது. சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட, ஓ மை கடவுளே ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இதில் துல்கர் சல்மான், ரிது வர்மா நடித்திருந்தனர்.

    வரவேற்பை பெற்றது

    வரவேற்பை பெற்றது

    அடுத்து ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆன, ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் படங்கள் அதிக கவனிப்பை பெறவில்லை. ஓடிடியில் வெளியான மேலும் சில படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் படம் கவனிக்கப்பட்டது.

    சுமாரான வரவேற்பு

    சுமாரான வரவேற்பு

    அடுத்து சமீபத்தில் வெளியாகி இருக்கிற சூர்யாவின் சூரரைப் போற்று, ஆர்ஜே பாலாஜி, நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படங்கள் வரவேற்பை பெற்றுள்ளன. ஆனால், தியேட்டர் மீண்டும் திறக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்ட படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளன. ரசிகர்கள் யாரும் தியேட்டருக்கு வராதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    சிறப்பான தொடக்கம்

    சிறப்பான தொடக்கம்

    இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு அதிகம் என்றாலும் கொரோனா பிரச்னை இந்த வருடத்துடன் முடிந்து அடுத்த வருடம், மற்ற துறைகளைப் போல சினிமா துறைக்கும் சிறப்பான தொடக்கமாக இருக்கும் என்று நம்புகின்றனர். அதற்கு, பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படும் விஜய்யின் மாஸ்டர் படம் சரியான ஆரம்பமாக இருக்கும் என்றும் நம்புகிறார்கள்.

    English summary
    COVID-19 has upended the global film industry, halting film production and closing cinemas.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X