twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா பாதித்த நிலையிலும் உதவியை நிறுத்தாத சோனு சூட்

    |

    மும்பை : தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கொடூரமான வில்லன் கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சோனு சூட். இருந்தாலும் தனது நிஜ வாழ்க்கையில், பலருக்கும் பல உதவிகளை செய்து நிஜ ஹீரோவாக இருந்து வருகிறார்.

    மீண்டும் சர்ச்சை பேச்சு...அடுத்த சிக்கலில் சிக்கிய கங்கனா மீண்டும் சர்ச்சை பேச்சு...அடுத்த சிக்கலில் சிக்கிய கங்கனா

    சமூக வலைதளங்கள் அனைத்திலும் மிக ஆக்டிவாக இருக்க கூடிய சோனு சூட், அதன் மூலம் பல சமூக சேவைகளை செய்து வருகிறார். குறிப்பாக 2020 ல் கொரோனா பரவலால் நாடு முழுவதும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அந்த சமயத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவினார் சோனி சூட்.

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உதவி கேட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு செல்ல உதவினார். இதனால் சோனு சூட்டிற்கு பாராட்டுக்களும், ஆதரவும் குவிந்தது.

    கொரோனா பாதித்த சோனு சூட்

    கொரோனா பாதித்த சோனு சூட்

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சோனு சூட்டிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட சோனு சூட், தான் லேசான அறிகுறிகளுடன் இருப்பதாகவும், தொடர்ந்து உங்களின் ஒவ்வொரு பிரச்னையிலும் துணை நிற்பேன் என ஊக்கமளிக்கும் வகையில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார்.

    தொடரும் சமூக சேவை

    தொடரும் சமூக சேவை

    அவர் சொன்னபடி, கொரோனாவால் சிகிச்சையில் இருந்து வரும் நிலையிலும் சமூக சேவையை தொடர்ந்து வருகிறார். தேவைப்படுபவர்களுக்கு அவர்களுக்கான உதவிகளை சமூக வலைதளங்கள் மூலமே செய்து வருகிறார். மிக மோசமான நிலையில் உதவி கிடைக்காமல் தவிப்பவர்களை பற்றிய தகவல் தெரிந்தாலும் அவர்களுக்கு சோனு சூட் உதவுவதால் மக்களிடம் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

    மருத்துவ உதவி கேட்ட நபர்

    மருத்துவ உதவி கேட்ட நபர்

    சமீபத்தில் ட்விட்டர் பயன்பாட்டாளர் ஒருவர், கொரோனாவால் தனது தந்தைக்கு 75 சதவீதம் நுழையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குர்கான் மருத்துவமனையில் படுக்கை வசதி அளிக்கப்படாததால் தவித்து வருவதாக சோனு சூட்டிற்கு தெரிவித்துள்ளார்.

    அரை மணி நேரத்தில் சரி செய்த சோனு

    அரை மணி நேரத்தில் சரி செய்த சோனு

    அதற்கு பதிலளித்த சோனு சூட், அடுத்த அரை மணி நேரத்தில் படுக்கை வசதி கிடைத்து விடும். அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் தந்தை விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். சொன்னபடியே அவருக்கு உதவியும் செய்துள்ளார் சோனு சூட்.

    Read more about: sonu sood coronavirus covid 19
    English summary
    COVID-19 positive Sonu Sood manages to provide help to patients facing trouble with medical facilities through social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X