கொரோனா பீதி...படப்பிடிப்பிற்கு வராமல் அடம்பிடிக்கும் ஜெகபதி பாபு
ஐதராபாத் : முன்னணி ஹீரோ என்ற பாதையில் இருந்து மாறி முன்னணி வில்லன் நடிகராகி வருகிறார் நடிகர் ஜெகபதி பாபு. சமீப காலமாக தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் வில்லன் கேரக்டரிலேயே அதிகம் நடித்து வருகிறது. இருப்பினும் ரசிகர்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது அஜய் பூபதி இயக்கும் மகா சமுத்ரம் படத்தில் சற்று வித்தியாசமான முக்கிய கேரக்டர் ஒன்றில் ஜெகபதி பாபு நடிக்கிறார். இதில் சர்வானந்த், சித்தார்த், அனு இமானுவேல், அதிதி ராய் ஹைத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் வித்தியாசமான வில்லன் கேரக்டரில் தான் ஜெகபதி பாபு நடிக்கிறார்.

அங்க நான் வரமாட்டேன்
விசாகப்பட்டினத்தில் நடக்கும் காதலை மையமாக் கொண்ட படம் இது. விசாகப்பட்டினத்தில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெகபதி பாபு, 2 நாட்களுக்கு முன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் திடீரென அதிகரித்து வரும் கொரோனாவால் விசாகபட்டினத்திற்கு வர மாட்டேன் என ஜெகபதி பாபு மறுத்து வருகிறாராம்.

கொரோனா பரவல் பயம்
இதனால் தன்னால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது என தயாரிப்பாளர்களிடம் கூறி, அதற்கான காரணத்தையும் ஜெகபதி பாபு விளக்கி உள்ளார். காற்றில் பரவும் கொடிய நோய் என்பதாலும், இரண்டாம் அலை தீவிரமடைந்து வருவதாலும் எந்த காரணத்திற்காகவும் ரிஸ்க் எடுக்க தான் தயாராகவில்லை என கூறி உள்ளார்.

விரைவில் மாற்றத்துடன் படப்பிடிப்பு
ஜெகபதி பாபு சொன்ன காரணத்தை ஏற்றுக் கொண்ட படக்குழுவினரும், படப்பிடிப்பு திட்டத்தில் சில மாற்றங்களை செய்துள்ளனராம். விரைவில் புதிய மாற்றங்களுடன் படப்பிடிப்பை தொடர உள்ளனராம். ஆனால் என்ன மாற்றம் செய்ய போகிறார்கள் என்பது பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

ஆகஸ்டில் படம் ரிலீஸ்
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வரும் மகா சமுத்ரம் படத்தின் வேலைகள் டிசம்பர் மாதம் துவங்கப்பட்டது. ஏற்கனவே கோவாவில் நடத்தப்பட வேண்டிய படப்பிடிப்பை முடித்து விட்டனர். ராமபிரம்மன் சங்கரா தயாரிக்கும் மகா சமுத்ரம் படம் ஆகஸ்ட் 19 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சைதன் பரத்வாஜ் இசையமைக்கிறார்.


Click it and Unblock the Notifications











