twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'கொரோனாவை தடுக்க தடுப்பூசி எல்லாம் வராது, மந்திரசக்திதான்..' பிரபல நடிகர் சொல்றதை பாருங்க!

    By
    |

    ஐதராபாத்: கொரோனாவுக்கு தடுப்பூசி எதிர்காலத்தில் கூட வராது என்று நடிகர் பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.

    பிரபல தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணா. இவர் இப்போது நடிக்கும் படத்துக்கு என்பிகே 106 என்று டைட்டில் வைத்துள்ளனர்.

    இதை போயபதி ஶ்ரீனு இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கப்பட்டது.

    ஹீரோயின் இல்லாமல்

    ஹீரோயின் இல்லாமல்

    கொரோனா அச்சுறுத்தலால், முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துப் படக்குழு திரும்பியது. ஹீரோயின் இல்லாமலேயே, ஹீரோ தொடர்பான காட்சிகளை மட்டும் படம் பிடித்தனர். சிம்ஹா, லெஜண்ட் ஆகிய பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களுக்குப் பிறகு போயபடி சீனு - பாலகிருஷ்ணா இணையும் 3-வது படம் இது.

    பர்ஸ்ட் லுக் பங்ஷன் பங்ஷன்

    பர்ஸ்ட் லுக் பங்ஷன் பங்ஷன்

    இதில் ஒரு ஹீரோயினாக பிரக்யா ஜெய்ஸ்வால், மற்றொரு ஹீரோயினாக சாயிஷா நடிக்கின்றனர். இதற்கிடையே, சேஹரி என்ற தெலுங்கு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய பாலகிருஷ்ணா, கொரோனாவை மந்திர சக்தியால்தான் கட்டுப்படுத்த முடியும் என்றார்.

    மந்திர சக்தி

    மந்திர சக்தி

    அவர் பேசியிருப்பதாவது: இதுவரை கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வந்திருக்கிறோம். இந்த வைரஸ் தொற்று நிற்கப் போவதில்லை. இதற்குத் தடுப்பூசியும் வராது. எதிர்காலத்திலும் வர வாய்ப்பில்லை. கொரோனா விஷயத்தில் நான் மந்திர சக்தியை நம்புகிறேன்.

    கொப்பளிக்க வேண்டும்

    கொப்பளிக்க வேண்டும்

    குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்கிறார்கள். அது தவறு. வெந்நீரில் குளிக்க வேண்டும். அதைத்தான் குடிக்க வேண்டும். தினமும் இரண்டு முறை உப்பு தண்ணீரால் வாய்க் கொப்பளிக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே பாதுகாப்பான, ஆரோக்கியமான நடவடிக்கையாகும்.

    வாழ்வது எப்படி

    வாழ்வது எப்படி

    மந்திர சக்தியும் கடவுள் நம்பிக்கையும்தான் இந்த கொரோனாவுக்குத் தீர்வு என நான் நம்புகிறேன். கொரோனா நம்முடன் நீண்ட காலம் இருக்கப் போகிறது. அதனுடன் வாழ்வது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு நடிகர் பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.

    குறைந்து வருகிறது

    குறைந்து வருகிறது

    இந்தியாவில் கொரோனா சமீபகாலமாக குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29,164 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 88,74,291 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,30,519 ஆக உயர்ந்துள்ளது.

    English summary
    Nandamuri Balakrishna says, COVID-19 vaccine many not come in near future and he emphasized the power of mantras and faith in god.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X