For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நீங்க தான் எங்கள காப்பாத்தனும்...புதிய அரசை மலை போல் நம்பும் கோலிவுட்

  |

  சென்னை : ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே கொரோனாவின் கோர பிடியில் அல்லல் பட்டு வருகிறது. படப்பிடிப்பு தளங்களில் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பல முக்கிய படங்களில் வேலைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றிற்கு ஆளாகி வருவது வழக்கமாகி உள்ளது.

  'அர்ஜுன் ரெட்டி’க்கு இன்றோடு 32 வயசாச்சு… இணையத்தில் தெறிக்கும் வாழ்த்து !'அர்ஜுன் ரெட்டி’க்கு இன்றோடு 32 வயசாச்சு… இணையத்தில் தெறிக்கும் வாழ்த்து !

  சினிமா பிரபலங்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் கொரோனாவிற்கு ஆளாகி சிகிச்சையில் உள்ளனர். பிரபலங்கள் சிலர் தங்கள் உறவுகளை இழந்துள்ளனர். பாண்டு, கே.வி.ஆனந்த் உள்ளிட்ட பலரும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

  அரசு மீது நம்பிக்கை

  அரசு மீது நம்பிக்கை

  கொரோனா புதிய கட்டுப்பாடுகள் காரணமாக ஏப்ரல் 26 முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டுள்ளன. இதனால் சினிமா துறையை சீரமைக்க தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசால் தான் முடியும் என எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கை கோலிவுட்டில் ஏற்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடாகவே தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என திரையுலகை சேர்ந்த பலரும் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, வாழ்த்து கூறி வருவதுடன் தங்கள் தரப்பு கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர். சினிமா துறையில் சில முக்கிய மாற்றங்களை புதிய அரசு கொண்டு வரும் என தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் நம்புகிறார்கள்.

  ஆரோக்கிய அரசியல் நடக்கும்

  ஆரோக்கிய அரசியல் நடக்கும்

  இதுபற்றி முன்னணி விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம் கூறுகையில், மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த ஒத்துழைப்பை தர வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம், முதல்வர் ஸ்டாலின் கேட்டுள்ள விதம் தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் நடைபெறும் என்ற நம்பிக்கையை தந்துள்ளது. வரும் நாட்கள் தமிழ் சினிமாவிற்கு நல்லதாக இருக்கும் என நம்புகிறேன். கலைஞர் கருணாநிதியும் தனது ஆட்சி காலத்தில் திரைத்துறையை நல்லமுறையில் வடிவமைத்தார். திரைத்துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, சினிமாத் துறையினரை ஊக்குவித்தார். விரைவில் முதல்வரை சந்தித்து தற்போதைய நிலையை எடுத்துக் கூறி, சில கோரிக்கைகளை முன் வைக்க உள்ளோம் என்றார்.

  சினிமாவின் நண்பன் திமுக

  சினிமாவின் நண்பன் திமுக

  ட்விட்டர் மூலம் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சி.வி.குமார், புதிய அரசு திரைத்துறை மீதான வரி சுமையை குறைக்க ஜிஎஸ்டி.,யில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அவர் கூறுகையில், திமுக அரசு எப்போதுமே சினிமாவின் நண்பன். அவர்களின் ஆட்சி கோலிவுட்டின் பொற்காலமாக இருக்கும் என அவர்கள் கடந்த காலங்களில் காட்டி உள்ளனர். நடிகர் உதயநிதி தற்போது சட்டசபை உறுப்பினராகவும் தேர்வாகி உள்ளார். இது திரைத்துறைக்கு கூடுதல் ஊக்கமளிப்பதாக உள்ளது என்றார்.

   தியேட்டர்களை திறக்க அனுமதிக்கனும்

  தியேட்டர்களை திறக்க அனுமதிக்கனும்

  தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் எஸ்.ஆர்.பிரபு கூறுகையில், சில மாற்றங்களுடன் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். முந்தைய அரசு டிக்கெட் விலையை உயர்த்திய திரைத்துறைக்கு உதவிகரமாக அமைந்தது. அதே போன்று இந்த அரசும் பல படங்களை ஒரே நேரத்தில் திரையிட அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.

  தவிக்கும் நடிகர் சங்கம்

  தவிக்கும் நடிகர் சங்கம்


  நடிகர் விஷால் நேற்று முதல்வரை சந்தித்துள்ளார். அதற்கு பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில், முதல்வரை சந்தித்து வாழ்த்து கூறியதுடன், நடிகர் சங்கத்தின் தற்போதைய நிலை பற்றி கூறினேன். தற்போதைய சூழலில் பல கலைஞர்கள் அவர்களின் ஓய்வூதியத்தை பெற முடியாமல், மருந்து வாங்க கூட பணம் இல்லாத நிலையில் தவித்து வருகின்றனர்.

  முதல்வரிடம் விஷால் கோரிக்கை

  முதல்வரிடம் விஷால் கோரிக்கை

  தற்போதைய இக்கட்டான சூழலை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். கொரோனா பேரிடர் சமயத்தை எங்களை காப்பாற்றவும் கேட்டுள்ளேன். கொரோனா சூழல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்ததும் தேவையான உதவிகளை செய்வதாக முதல்வரும் உறுதி அளித்துள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

  English summary
  several other sectors, the film industry, too, has pinned high hopes on the new government.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X