twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோவிட் ஒரு சாதாரண நோய் அல்ல. .எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை காண்கிறேன்.. கவுண்டமணி உருக்கம்!

    |

    சென்னை: கொரோனா ஒரு சாதாரண நோயல்ல என்றும் மக்கள் பாதுகாப்பாக வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

    தமிழகத்தை பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்தப்படியே உள்ளது.

    சில தளர்வுகள்

    சில தளர்வுகள்

    இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் இதுவரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது.

    மாஸ்க் அணிய வேண்டும்

    மாஸ்க் அணிய வேண்டும்

    இந்நிலையில் வரும் திங்கள் கிழமை முதல் தளர்வுகளின்றி தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    கவுண்டமணி உருக்கம்

    கவுண்டமணி உருக்கம்

    அந்த வகையில் நகைச்சுவை நடிகரான கவுண்டமணியும் மக்கள் அவசியமின்றி வெளியே சுற்றக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் கவுண்டமணி.

    சாதாரண நோய் அல்ல

    சாதாரண நோய் அல்ல

    அவரது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது, கோவிட் ஒரு சாதாரண நோய் அல்ல. எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை நான் காண்கிறேன். தயவுசெய்து உள்ளே தங்கியிருங்கள். தடுப்பூசி அல்லது ஏதேனும் அவசரநிலைக்கு மட்டும் வெளியே வாருங்கள்! என பதிவிட்டுள்ளார்.

    தமிழ் சினிமா பிரபலங்கள்

    தமிழ் சினிமா பிரபலங்கள்

    நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 467 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Goundamani requesting people to stay in home. He says Covid is not a normal disease.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X