டாக்டர், நர்ஸ் கவனிப்பதில்லை.. மருத்துவமனையில் தற்கொலை எண்ணம் வருகிறது.. கொரோனா பாதித்த நடிகை பகீர்

By

மும்பை: கோவிட்-19 பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகை ஒருவர் தனக்கு தற்கொலை எண்ணம் வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பிரபல மாடலும் இந்தி நடிகையுமான இஷிகா போரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 24 ஆம் தேதி உடல்நிலை சரியில்லாததை அடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பாங்காங் பகுதியில் மலைகளை ஆக்கிரமித்த சீனா.. இந்திய ரோந்து பணிக்கும் இடையூறு.. அச்சத்தில் மக்கள்

அரசு மருத்துவமனை

அரசு மருத்துவமனை

இதையடுத்து அசாம் மாநிலம் நகோனில் (Nagaon) உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு தனக்குச் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது சமூக வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: நான் மும்பையில் வசிக்கிறேன். சொந்த ஊருக்கு சில நாட்களுக்கு முன் வந்தேன். கொஞ்சம் காய்ச்சலாக இருந்ததால் மருத்துவமனையில் சேர்த்துவிட்டனர்.

வீட்டிலேயே

வீட்டிலேயே

அரசு வழிகாட்டுதலின்படி, வீட்டிலேயே 14 நாட்கள் என்னை தனிமைப்படுத்தி இருக்கலாம். அங்கு மூலிகை மருந்துகள், சூப்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை உண்டு, என்னை இன்னும் சிறப்பாக வைத்திருக்க முடியும். இங்கு டாக்டரோ, நர்ஸோ எங்களை கவனிப்பதில்லை. ஏன் எங்களை இங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கோவிட்-19-க்கான சிகிச்சை பற்றி நான் அறிந்திருக்கிறேன்.

வெள்ளரி, தக்காளி

வெள்ளரி, தக்காளி

மஞ்சள் போடப்பட்ட வெதுவெதுப்பான நீர், வைட்டமின் சி, வெள்ளரி, தக்காளி, அஸ்வகந்தா ஆகியவற்றைக் கொண்டு ஆரம்பகட்ட கோவிட்-19 ஐ குணப்படுத்திவிட முடியும். தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள். நான் மனச்சோர்வு காரணமாக கடும் வேதனையில் இருக்கிறேன். மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை எண்ணம்தான் வருகிறது.

ஆரோக்கிய உணவு

ஆரோக்கிய உணவு

இந்த மருத்துவமனையில் குளிர்ந்த நீரையும் உணவையும் தருகிறார்கள். இது எனது உடலை மேலும் மோசமாக்குகிறது. இங்கு சேவையும் சரியில்லை. மருத்துவமனையும் சுகாதாரமற்றதாக இருக்கிறது. கொசுக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளேன். வீட்டில் என்றால் நான் எக்சர்சைஸ் செய்வேன், ஆரோக்கியமான உணவை உட்கொள்வேன். இங்கு எதையும் செய்ய முடியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எனக்குத் தெரியாது

எனக்குத் தெரியாது

நடிகை ஒருவர் இப்படி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இவரது புகார் பற்றி மாவட்ட துணை கமிஷனர் ஜாதவ் சைகியா கூறும்போது, மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லை என்ற நடிகை இஷிகாவின் புகார் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் அவர் சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கு ஏதாவது குறை என்றால் மருத்துவர்களிடம் பேசலாம் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X