தனுஷ் படத்தில் விவேக் முகத்தில் சாணி அடிக்கும் காட்சி... தேசிய அறிவிப்பால் முழித்த இயக்குநர்

தலைநகரம், படிக்காதவன், மாப்பிள்ளை போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்த இயக்குனர் சுராஜ் தற்சமயம் நடிகர் வடிவேலுவை வைத்து நாய் சேகர் ரிட்டன்ஸ் என்கிற படத்தை இயக்கியுள்ளார்

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நடன இயக்குனர் பிரபு தேவா ஒரு பாடலுக்கு கோரியோகிராஃப் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சுராஜ் நடிகர் விவேக் உயிருடன் இருந்தபோது ஒரு விருது வழங்கும் விழாவில் அவருக்கு விருது கொடுத்துவிட்டு அவர்களுடைய படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை பேசி இருந்தது தற்சமயம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மாப்பிள்ளை

மாப்பிள்ளை

நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்த மாப்பிள்ளை திரைப்படத்தை நடிகர் தனுஷ் ரீமேக் செய்தார். அந்தப் படத்தை இயக்கியது இயக்குனர் சுராஜ். சன் பிக்சர்ஸ் விநியோகித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. வழக்கமாக சுராஜ் திரைப்படங்களில் நடிக்கும் வடிவேலு படிக்காதவன் திரைப்படத்தில் நடிக்கவில்லை. அவருக்கு பதில் நடிகர் விவேக் நடித்திருந்தார் அது நல்ல வரவேற்பை பெற்றவுடன் மீண்டும் மாப்பிள்ளை படத்தில் சுராஜ் இயக்கத்தில் விவேக் நடித்தது குறிப்பிடத்தக்கது

தனுஷ்-விவேக்

தனுஷ்-விவேக்

நடிகர்கள் தனுஷ் மற்றும் விவேக் நடித்த நகைச்சுவை காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. படிக்காதவன், மாப்பிள்ளை, உத்தம புத்திரன், வி.ஐ.பி என்று அனைத்து படங்களிலும் நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக வந்திருக்கும். உத்தம புத்திரன் மற்றும் வி.ஐ.பி படங்களில் நடிக்க விவேக் முதலில் ஒப்புக் கொள்ளவில்லையாம். காரணம், அவருக்கான காட்சிகள் குறைவாக இருந்துள்ளது. ஆனால் தனுஷின் வற்புறுத்தலின் பேரில்தான் விவேக் நடித்துள்ளார்.

சாணியும் விருதும்

சாணியும் விருதும்

மாப்பிள்ளை படத்தில் நடிக்கும் பொழுது அதில் ஒரு காட்சியில் விவேக்கின் முகத்தில் வில்லன்கள் சாணியை அடிப்பார்கள். அந்தக் காட்சியை எடுப்பதற்காக சானியெல்லாம் தயார் செய்து விட்டு ரெடியாக இருந்திருக்கிறார் சுராஜ். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த நடிகர் விவேக் தனக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளதாக கூற, சுராஜ் தர்ம சங்கடமாக உணர்ந்தாராம். விருது வாங்கப் போவதாக சொல்லியவரின் முகத்தில் எப்படி சாணியை அடித்து காட்சியை எடுப்பது என்று தயங்கியிருக்கரார்.

Recommended Video

Director Ram Gopal Varma | Vikram படம் பார்த்தேன் வேற லெவல் | Ladki | *Interview
வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

பின்னர் ஒரு வழியாக விவேக்கிடம் விஷயத்தை கூறியுள்ளார் . அவரும் எடுத்து விடலாம் என்று அன்று அந்தப் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். அன்று முழுவதும் முகத்தில் சாணி அடிக்கும் காட்சியைத் தான் எடுத்திருக்கிறார்கள். சாணியுடன் இருக்கும் போது அவருக்கு தொலைபேசியில் வாழ்த்துக்கள் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் உட்பட பலரும் கால் செய்துள்ளனர். அவரும் சாணியுடன் அவர்களிடம் வாழ்த்துக்களை பெற்றதாக இயக்குனர் சூராஜ் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X