»   »  'டீமானிடைசேஷன் ஆன்த்தம்' பாடின கையோட சிம்பு பாடிய 'Cow Song'! - இதுக்கு பஞ்சாயத்து எப்ப?

'டீமானிடைசேஷன் ஆன்த்தம்' பாடின கையோட சிம்பு பாடிய 'Cow Song'! - இதுக்கு பஞ்சாயத்து எப்ப?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சிம்பு பாடிய பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், 'நட்புனா என்னானு தெரியுமா' படத்தில் சிம்பு ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் நேற்று வெளியாகியிருக்கிறது. 'Cow song' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் பாடல் நட்பை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது.

'மாடு பால் கொடுக்கும்... ஃபிகர் மிஸ்டுகால் கொடுக்கும்... ' எனத் தொடங்கும் இந்தப் பாடலை ஜெயச்சந்திர ஹாஸ்மி, மிர்ச்சி விஜய் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். இந்தப் பாடலுக்கு தரண் இசையமைத்திருக்கிறார்.

Cow song by Simbu

சமீபத்தில், டீமானிடைசேஷன் திட்டம் அறிவித்து ஒரு வருடம் ஆனதையொட்டி பா.ஜ.க-வினர் கொண்டாடினர். மோடியின் பணமதிப்பு நீக்கத் திட்டத்தை எதிர்த்தவர்கள் அந்த நாளைக் கருப்பு நாள் என அறிவித்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அந்த நேரத்தில், 'தட்றோம் தூக்றோம்' படத்துக்காக கபிலன் வைரமுத்து வரிகளில் உருவான 'Demonetisation anthem' பாடலை சிம்பு பாடியிருந்தார். இந்தப் பாடல் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பா.ஜ.க-வினர் இந்தப் பாடலுக்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்ததோடு சிம்புவுக்கு எதிராக போராட்டங்களையும் தொடங்க முடிவு செய்திருந்தனர். இதனால் அவரது வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்தது. இந்நிலையி, 'Cow song' எனப் பெயரிடப்பட்டதும் இதுவும் பா.ஜ.க எதிர்ப்புப் பாடலா என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இந்தப் பாடல் நட்பை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது.

English summary
Simbu sang the 'Demonetisation Anthem' goes controversy. Now, Simbu has sung a 'Cow song' in the film 'Natpuna ennanu theriuma' was released yesterday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X