“தல படத்துக்கு வசனம் எழுத முடியலையே”... கடைசி காலத்தில் ரொம்பவே வருத்தப்பட்ட கிரேஸி மோகன்!

அஜித் படத்தில் பணியாற்ற முடியவில்லையே என மிகவும் வருந்தியுள்ளார் கிரேஸி மோகன் என்பது தெரியவந்துள்ளது.

Recommended Video

Crazy Mohan: கடைசி காலத்தில் ரொம்பவே வருத்தப்பட்ட கிரேஸி மோகன்- வீடியோ

சென்னை: நடிகர் அஜித்துடன் ஒரு படத்தில் கூட பணியாற்ற முடியவில்லையே என்பது தான் கிரேஸி மோகனின் பெரிய வருத்தமாக இருந்துள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடிப் பட வசனகர்த்தாவாக, மிகச் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்தவர் கிரேஸி மோகன். திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று அவர் காலமானார்.

அவரது இந்த திடீர் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேரிலும், சமூகவலைதளங்கள் வாயிலாகவும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

கிரேஸி மோகனின் ஆசை:

கிரேஸி மோகனின் ஆசை:

இந்நிலையில், தனது கடைசிக் காலத்தில் அஜித் படத்தில் பணியாற்ற முடியவில்லையே என கிரேஸி மோகன் மிகவும் வருந்தியதாக ஒரு தகவல் தெரிய வந்துள்ளது. திரைத்துறையில் இருப்பவர்களில் பலருக்கும் அஜித்துடன் சேர்ந்து பணி புரிய வேண்டும் என்ற ஆசை இருக்கும். கிரேஸி மோகனுக்கும் அதே போல் ஆசை இருந்துள்ளது.

அஜித் படம்:

அஜித் படம்:

இது தொடர்பாக சமீபத்திய பேட்டி ஒன்றில், 'நான் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களில் வேலை செய்து விட்டேன். அஜித்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம், அந்த வாய்ப்பு ஏகன் படத்தின் மூலம் எனக்கு கிடைத்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் பணியாற்ற முடியவில்லை' என வருத்தத்துடன் கூறியுள்ளார் கிரேஸி மோகன்.

வியப்பு:

வியப்பு:

மேலும், ‘நான் வெளியில் சென்றால் பலரும் என்னிடம் ஒரு குறிப்பிட்ட நடிகர் நம்பரை தான் கேட்கிறார்கள். அது ரஜினியோ, கமலோ அல்ல... அஜித் பற்றித்தான் கேட்கிறார்கள். அவருக்கு இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதாய் பார்த்து வியந்தேன்.

நெகிழ்ச்சி:

நெகிழ்ச்சி:

அஜித்தின் வீட்டுக்கு நான் ஒருமுறை சென்றிருந்தேன். அப்போது அவர் வீட்டில் பெரிய சாய்பாபா போட்டோ இருப்பதை பார்த்து வியந்தேன். நான் சாய் பக்தன் என்பதால் அதுபோல ஒரு காபி கிடைக்குமா என அஜித்திடம் கேட்டேன். சில நாட்கள் கழித்து அதுபோல ஒன்று என் வீடு தேடி வந்தது. நான் எதிர்பார்க்கவே இல்லை" என கிரேஸி மோகன் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

ரசிகர்கள் சோகம்:

ரசிகர்கள் சோகம்:

ஏகன் வாய்ப்பு கை நழுவினால் என்ன, இனி வரும் காலங்களில் அஜித்துடன் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார் கிரேஸி. ஆனால், அது கனவாக முடிந்து விட்டது. அஜித் - கிரேஸி மோகன் கூட்டணியில் படம் எதுவும் வரவில்லையே என சமூகவலைதளங்களில் அஜித் ரசிகர்களும் சோகமாகப் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X