RRR நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர்... இதுதான் செலவு லிஸ்ட்: சர்ச்சைக்கு முடிவுகட்டும் படக்குழு!

ஹைதராபாத்: 95வது ஆஸ்கர் விழாவில் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றது.

கோல்டன் குளோப் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை வென்றிருந்த நாட்டு நாட்டு பாடல், தற்போது ஆஸ்கரையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தப் பாடலுக்கு ஆஸ்கர் விருது பெறுவதற்கு ராஜமெளலி 80 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாக சொல்லப்பட்டது.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள RRR படக்குழு செலவு செய்த விவரங்களையும் வெளியிட்டுள்ளதாம்.

 ஆஸ்கர் வென்ற RRR

ஆஸ்கர் வென்ற RRR

95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில், ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றது. சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் இந்த விருது கிடைத்தது. ஏற்கனவே கோல்டன் குளோப் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை வென்ற இந்தப் பாடல், தற்போது ஆஸ்கரையும் வென்றது.

 MM கீரவாணி - சந்திரபோஸ்

MM கீரவாணி - சந்திரபோஸ்

RRR படத்தின் இசையமைப்பாளர் MM கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் நாட்டு நாட்டு பாடலுக்கான ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து பிரதமர் மோடி முதல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் RRR படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனிடையே RRR படக்குழு 80 கோடி ரூபாய் வரை பணம் செலவு செய்தே ஆஸ்கர் விருதை வென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இயக்குநர் ராஜமெளலி இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

 செலவு லிஸ்ட் இதுதான்

செலவு லிஸ்ட் இதுதான்

முன்னதாக RRR படத்தை பாராட்டுவதற்காக ஹாலிவுட் இயகுக்குநர்கள் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன் ஆகியோருக்கும் பணம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த குற்றச்சாட்டுக்கும் இயக்குநர் ராஜமெளலி மறுப்பு தெரிவித்தார். ப்ரோமோஷன், விளம்பரங்களுக்கு பணம் செலவு செய்யப்பட்டிருக்கலாம், ஆனால் ஆஸ்கர் விருதை பணம் கொடுத்து வாங்க முடியாது என சினிமா ஆர்வலர்கள் கூறியிருந்தனர்.

 நம்ப மறுக்கும் ரசிகர்கள்

நம்ப மறுக்கும் ரசிகர்கள்

இந்நிலையில், ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்க கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் இருவருக்கு மட்டுமே இலவச பாஸ் கொடுக்கப்பட்டது. ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் NTR ஆகியோர் தலா 20 லட்சம் கொடுத்துதான் விழாவுக்கு சென்றதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனால், ரசிகர்களோ ஆஸ்கர் விருது பெற எவ்வளவு பணம் செலவு செய்தார்கள் எனக் கேட்டால், நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து விளக்கம் கொடுத்துள்ளதாக விமர்சித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X