Cricket based movies: அடுத்தடுத்து கிரிக்கெட்டை மையமாக கொண்டு வெளியாகும் படங்கள்.. சூப்பர்ல!
சென்னை: சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். குறிப்பாக இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை காண ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சர்வதேச போட்டிகள் முதல் தமிழ்நாடு அளவிலான போட்டிகள் வரை கிரிக்கெட் போட்டிகளுக்காக பள்ளி, கல்லூரிக்குக்கூட போகாமல் பார்க்கும் ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு தெருக்களிலும் பேட் இருக்கிறதோ இல்லையோ, கிரிக்கெட் போட்டிகள் கண்டிப்பாக இருக்கும். மூன்று குச்சிகளை நட்டு, ஸ்டம்ப் என கூறிவிட்டு போட்டிகளை ஆடும் சிறுவர்களை பார்க்க முடியும். இதில் பெரியவர்களும் சமமான உற்சாகத்துடன் ஆடுவதை பார்க்கலாம்.
அந்த வகையில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு வெளியான பல படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்திருக்கின்றன. முன்னதாக விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ஜீவா படமும் கிரிக்கெட்டை மையமாக கொண்டு வெளியாகி, அதன் நெளிவு சுளிவுகளை பேசியது. போராடி பெறும் வெற்றியை சுட்டிக் காட்டியது. இதேபோல கடந்த 2021ம் ஆண்டில் வெளியான கனா படமும் பெண்கள் கிரிக்கெட்டை பேசியது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் லீட் கேரக்டரில் நடித்திருந்தார். சிவகார்த்திகேயனும் அழுத்தமான கேமியோ கேரக்டரில் நடித்திருந்த இந்தப் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்தார். இந்த வரிசையில் 83,800 படங்களும் சிறப்பாக அமைந்தன.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்: சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகளுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த வரிசையில் கால்பந்து போட்டிகளையும் சேர்த்துக் கொள்ளலாம் என்ற போதிலும் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளுக்குத்தான் மவுசு அதிகம். கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பது மட்டுமில்லாமல் தெருவிற்கு தெரு சிறிய குச்சிகளை வைத்துக் கொண்டு கிரிக்கெட் போட்டிகளை விளையாடும் ஏராளமான சிறுவர்களை பார்க்க முடியும். அவர்கள் அனைவரது கண்களிலும் பெரிய கிரிக்கெட்டராகும் கனவு இருக்கும். காலத்திற்கு ஏற்ப இந்தக் கனவுகளில் மாற்றம் இருக்கும் என்றாலும் தங்களது கிரிக்கெட் ஆடும் ஆசையை மட்டும் அவர்கள் ஒதுக்கிவிட மாட்டார்கள்.
அதிகரிக்கும் கிரிக்கெட் பயிற்சி நிறுவனங்கள்: நீண்ட நாட்களுக்கு பிறகு நான்கு நண்பர்கள் சந்தித்தாலும் அவர்கள் உடனடியாக இணைந்து கிரிக்கெட் போட்டிகளை விளையாடத்தான் விரும்புவார்கள். ஒவ்வொரு ஏரியாவிலும் கிரிக்கெட் பயிற்சி நிறுவனங்களும் அதிகரித்துதான் காணப்படுகிறது. அந்த வகையில் சினிமாவிலும் கிரிக்கெட் போட்டிகளை மையமாக கொண்டு ஏராளமான திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம்தான் உள்ளன. தமிழிலும் விஷ்ணு விஷால் -ஸ்ரீதிவ்யா லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான ஜீவா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கனா, உள்ளிட்ட ஏராளமான படங்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்டு வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தன.
கிரிக்கெட்டை மையமாக கொண்ட படங்கள்: இந்தப் பட்டியலில் 83,800 போன்ற படங்களும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது தமிழில் அடுத்தடுத்து 3 படங்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்டு வெளியாகவுள்ளன. இதில் முக்கியமான படமாக ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ள லால் சலாம் படம் உள்ளது. படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் பொங்கலையொட்டி வெளியாகவிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது. 3, வை ராஜா வை போன்ற படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் ரஜினியும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
லால் சலாம் படம்: லால் சலாம் படம் பிப்ரவரி 9ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதனிடையே அசோக் செல்வன், சாந்தனு லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ப்ளூஸ்டார் படமும் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்தப் படம் வரும் ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளன. இந்தப் படத்தில் ராஜேஷ் என்ற கேரக்டரில் நடித்துள்ள சாந்தனு, இந்தப் படம் தன்னுடைய கேரியரில் மறக்க முடியாத படமாக அமைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதேபோல ஹரீஷ் கல்யாண், தினேஷ் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லப்பர் பந்து படம் பிப்ரவரி 16ம் தேதி ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
கிரிக்கெட் கதைக்களங்கள்: கிரிக்கெட்டையே தங்களது மூச்சாக நினைத்து ஏராளமான இளைஞர்கள் அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் அவர்களது நாடித்துடிப்பை உணர்ந்து கிரிக்கெட்டை கதைக்களமாக கொண்டு ஏராளமான படங்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம்தான் உள்ளன. ரசிகர்களையும் கவர்ந்துதான் வருகின்றன. அந்தவகையில் அடுத்தடுத்து இன்னும் சில தினங்களில் கிரிக்கெட்டை மையமாக கொண்ட மூன்று படங்கள் வெளியாகவுள்ளன. இதில் ரஜினிகாந்த், கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ள லால் சலாம் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.


Click it and Unblock the Notifications











