கிரிக்கெட் வீரர் நடராஜுக்கும் யோகிபாபுவுக்கும் இடையே இப்படி ஒரு உறவா ?
சென்னை : அஜித் நடிக்கும் வலிமை, விஜய் நடிக்கும் பீஸ்ட் என வரிசையாக முக்கிய படங்கள் பலவற்றில் புக்காகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் யோகிபாபு. இன்றைய தேதியில் கோலிவுட்டில் பிரபல ஹீரோக்களுக்கு இணையாக கைவசம் அதிக படங்களை வைத்திருக்கும் நடிகர் என்றால் அது யோகிபாபு தான்.

இந்நிலையில் நடிகர் யோகிபாபுவுடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களை கிரிக்கெட் வீரர் நடராஜன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த ஃபோட்டோக்கள் வைரலாகின. இந்த சந்திப்பு எப்போது நடந்தது, இவர்கள் எதற்காக சந்தித்தார்கள் என்ற கேள்விகளை பலர் முன்வைத்தனர்.
விசாரித்ததில், யோகிபாபுவும் நடராஜனும் நல்ல நண்பர்களாம். சமீபத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி மண்டேலா படத்தை பார்த்து விட்டு பாராட்டி உள்ளார். இதனால் குஷியான நடராஜன், யோகிபாபு என் ஃபிரண்ட் தான் என கூறி வீடியோ காலில் பேச வைத்துள்ளார்.
இந்நிலையில் யோகிபாபுவும், நடராஜனும் ரெஸ்டாரென்ட் ஒன்றில் சந்தித்து ஜாலியாக பேசி உள்ளனர். அப்போது நடராஜனுக்கு முருகன் சிலை ஒன்றை பரிசாக அளித்துள்ளார் யோகிபாபு. யோகிபாபு தீவிர முருக பக்தர். ட்விட்டரில் கூட அடிக்கடி முருகன் படங்களை தான் யோகிபாபு பகிர்வார்.
இந்த ஃபோட்டோக்களை தான் நடராஜன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அத்துடன் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய நாள். அன்பான மற்றும் கலகலப்பான நண்பர், நடிகர் யோகிபாபுவை சந்தித்த மகிழ்ச்சியான தருணம் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார் நடராஜன்.


Click it and Unblock the Notifications











