முன்பே வா அன்பே வா .. அடிக்கடி முனுமுனுக்கும்.. ஐ.பி.எல் ஹீரோ!

சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனக்கு பிடித்த பாடல் என்று ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் சூர்யா. விஜய், அஜித் போலவே இவருக்கும் ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. நேருக்கு நேர் திரைப்படம் மூலம் 1997ல் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவராக இருக்கிறார்.

 Cricket player Suresh Raina loves the song Munbe Vaa Anbe Vaa

இந்நிலையில் மிஸ்டர் ஐ.பி.எல் என்று அழைக்கப்படும் நம்ம சின்ன தல சுரேஷ் ரெய்னா தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூர்யா, ஜோதிகா இணைந்து நடித்திருந்த 'சில்லுனு ஒரு காதல்'திரைப்படத்தின் பாடலான முன்பே வா அன்பே வா பாடலை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். இதுமட்டுமின்றி அந்த பாடலை அடிக்கடி கேட்பதாகவும் கூறியுள்ளார்.

 Cricket player Suresh Raina loves the song Munbe Vaa Anbe Vaa

கடந்த வருடம் ஏற்கனவே முன்பே வா அன்பே வா பாடலை ரெய்னா பாட, அந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்க்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் தனக்கு பிடித்த தமிழ் நடிகர் சூர்யா என்பதை பல்வேறு பேட்டிகளிலும் ரெய்னா பதிவு செய்துள்ளார். பிரபலமான கிரிக்கெட் வீரர், தமிழ் நடிகரை பாராட்டுவது தமிழ் சினிமாவிற்கு பெருமைதான்!

 Cricket player Suresh Raina loves the song Munbe Vaa Anbe Vaa

என்னதான் திறமையாக ஒரு நடிகன் நடித்தாலும் அவரின் ரசிகர்கள் தான் அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம். பல நடிகர்கள் தங்கள் ரசிகர்களை தக்க வைத்து கொள்ள முடியாமல் சினிமாவை விட்டு சென்றதை பார்த்திருப்போம். ஆனால் ரசிகர்களை தக்க வைத்து கொள்ள தெரிந்தவர்கள் டாப் ஹீரோக்களாக வலம் வருகிறார்கள் இதுவே நிதர்சனமான உண்மை.

 Cricket player Suresh Raina loves the song Munbe Vaa Anbe Vaa

எனவே தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்க ரசிகர்கள் தேவை. பல குழந்தைகளை படிக்க வைக்கும் சூர்யா சமூக சேவைகளும் செய்து வருகிறார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸின் நட்சத்திர வீரர்ரெய்னா கூறியது சூர்யாவிற்கு ஒரு அங்கீகாரம்தான்.

 Cricket player Suresh Raina loves the song Munbe Vaa Anbe Vaa

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X