கிரிக்கெட்டெல்லாம் புட்டுக்கிச்சோ.. எல்லா பிளேயர்ஸும் நடிக்க வர்றாங்க!

Recommended Video

cricket players turn actors

சென்னை: சினிமாவில் யார் வேண்டுமாலும் இப்ப நடிக்கலாம். அந்த வகையில் இப்போது கிரிக்கெட் வீரர்களும் நடிக்க வருகிறார்கள். அதுவும் அனைவரும் விரும்பும் தமிழ்ப் படங்களில்.

ஹர்பஜன் சிங் இப்போது நடிக்க வருகிறார். கார்த்திக் யோகி எடுக்கும் டிக்கிலோனா படத்தில்தான் அவர் நடிக்கப் போகிறார். இதில் சந்தானம்தான் ஹீரோ. 3 கெட்டப்பில் வருகிறாராம் சந்தானம். ஹர்பஜன் சிங் செம கோபக் காரர். கூடவே செமையாக காமெடியும் பண்ணுவார். ஜோக்கடிப்பார். எனவே சந்தானம் படத்தில் இவரை எப்படி காட்டப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்புக்குரிய ஒன்று.

cricket players turn actors

அடுத்து விக்ரமுடன் ஒரு கிரிக்கெட் வீரர் இணைகிறார். அவர்தான் இர்பான் பதான். விக்ரம் 58 படத்தில் இவர் வருகிறார். இப்படத்தில் 10 கெட்டப்களில் நடிக்கவுள்ளார் விக்ரம். அஜய் ஞானமுத்து இதை இயக்குகிறார்.

இதேபோல முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த்தும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளது நினைவிருக்கலாம். கிரிக்கெட் களத்தில் அதகளப்படுத்திய இந்த 3 பவுலர்களும் சினிமாவில் எப்படி பட்டையைக் கிளப்புவார்கள் என்பது போகப் போக பாரக்கலாம்.

சரி பிகிலோடு மோதப் போகும் கைதி படம் எந்த அளவுக்கு அடித்து நொறுக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் பாடல் கிடையாது, ரொமான்ஸ் கிடையாது, காதல் கிடையாது.. எனவே படம் கதையை மட்டுமே நம்பி களம் குதிக்கிறது. லோகேஷ் கனகராஜின் இந்த திறமையை பார்த்துதான் விஜய் தனது அடுத்த படத்தை லோகேஷிடம் கொடுத்தாராம்.

எப்படியோ தமிழ் சினிமா நன்றாக இருந்தால் சரித்தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X