அண்ணே ஒரு விளம்பரம்.. கவுண்டமணியுடன் எடுத்த போட்டோவை போட்ட கிரிக்கெட் வீரர்.. வைரலாகும் போட்டோ!
சென்னை: தமிழக கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் காமெடி கிங் கவுண்டமணியுடன் கடந்த ஆண்டு எடுத்துக் கொண்ட த்ரோபேக் புகைப்படத்தை பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்.
தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத காமெடி நடிகராக பல ஆண்டு காலம் நடிகர் கவுண்டமணி கலக்கி உள்ளார்.
கடந்த மே 25ம் தேதி தனது 82வது பிறந்தநாளை கொண்டாடிய கவுண்டமணி கொரோனா ஒரு கொடிய நோய் அனைவரும் பாதுகாப்பாக இருங்க என ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

அண்ணே ஒரு விளம்பரம்
"Me- அண்ணே ஒரு விளம்பரம்...
Gounder- டேய் அந்த சினிமா காரங்க தான் இப்பிடி பன்றாங்க நா.. நீயுமாடா....
This Day last year 2020" என்கிற ட்வீட்டை இன்று பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் நம்ம தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர் பத்ரிநாத். கடந்த ஆண்டு இதே நாளில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது அதனை ஷேர் செய்துள்ளார்.

தீவிர ரசிகர்
அட! நகைச்சுவை மன்னன் கவுண்டமணிக்கு தமிழ்நாட்ல ரசிகர்கள் இருப்பது பெரிய விஷயமா? சினிமா பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும், அரசியல்வாதிகளும் என பலரும் இந்த காமெடி லெஜண்டின் ரசிகர்கள் தானே.. இந்நிலையில், தீவிர ரசிகரான பத்ரிநாத் அவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

சேவிங் செட்டு
கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான பத்ரிநாத் பதிவிட்டுள்ள இந்த ட்வீட்டை பார்த்த அவரது ரசிகர்கள் கவுண்டமணியின் காமெடி பன்ச்களை பதிவிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.வாழைப்பழம் காமெடில, ''ஏண்ணே அடிக்கிறீங்க அவன் நம்ம செட்.. goundamani sir : என்ன நம்ம செட்டு பெரிய செவிங் செட்டு" என போட்டு கலாய்த்து வருகின்றனர்.

பலருக்கு இது கனவு
காமெடி கிங் கவுண்டமணியுடன் இப்படி ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டது தான் உங்கள் வாழ்க்கையிலேயே உங்களுக்கு கிடைத்த பெரிய விஷயம் என நான் நினைக்கிறேன். என்னை போல ஏகப்பட்ட ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய கனவாகவே உள்ளது என இவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பல ரசிகர்களும் இந்த போட்டோவுக்கு ரியாக்ட் செய்து வருகின்றனர்.

ஃபேக் அக்கவுண்ட்
சினிமா பிரபலங்கள் பெயரில் ஏகப்பட்ட ஃபேக் அக்கவுண்ட்கள் ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றன. வடிவேலு மற்றும் கவுண்டமணி உள்ளிட்ட காமெடி ஜாம்பவான்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ள நிலையில், அவர்களின் பெயர்களில் ஏகப்பட்ட போலி கணக்குகள் சமூக வலைதளத்தில் உலாவுகின்றன. பத்ரிநாத் போட்ட பழைய போட்டோவை தற்போது தான் எடுத்துக் கொண்டார் என்பது போலவும் ஒரு கவுண்டமணி ஃபேக் ஐடி போஸ்ட் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











