கல்யாணம் ஆனா கம்முனு இருக்கனும்...பேச்சிலர்னா ஜம்முனு இருக்கலாம்-ஹர்பஜன் சிங்

சென்னை: நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் பேச்சிலர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதை இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வெளியிட்டார். ஒரு தமிழ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கிரிக்கெட் வீரர் ஒருவர் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷின் காட்டில் இப்போது அடைமழை பெய்கிறது. தொடர்ந்து அவருடைய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. கடந்த வாரத்தில் சிவப்பு மஞ்சள் பச்சை வெளியாக சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

Cricketer Harbjajan Singh released Bachelor Film First Look Poster

அடுத்ததாக 100% காதல், மற்றும் ஐங்கரன் என இரண்டு படங்களும் ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளது. கைவசம் வேறு டஜன் படங்கள் உள்ளன. தற்போது அடுத்ததாக அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் ஆக்ஷன் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை வைத்து பேச்சிலர் என்ற படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக கோயம்புத்தூரை சேர்ந்த மாடல் அழகி திவ்யபாரதி நடிக்கிறார். இது குறித்து திவ்யபாராதி கூறும்போது, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் நான் சினிமாவில் அறிமுகமாகிறேன் என்று சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

இந்நிலையில் பேச்சிலர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதை இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வெளியிட்டார். ஒரு தமிழ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கிரிக்கெட் வீரர் ஒருவர் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.

பேச்சிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது பற்றி தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

இப்படம் குறித்து ஹர்பஜன் சிங்க் தன் பதிவில் கூறியதாவது கல்யாணம் ஆனா கம்முனு இருக்கனும், கமிட் ஆனா உம்முனு இருக்கனும் பேச்சுலெர்னா ஜம்முனு இருக்கலாம்

மேலும் இப்படத்திற்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி என்றும் பதிவிட்டிருந்தார். இப்படத்தின் மற்ற நடிகர்களின் விவரம் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டைட்டிலே படம் பேச்சிலர்கள் பற்றியும் அவர்களை சுற்றி நடக்கும் சுவையான சம்பவங்களாக இருக்கும் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X