என் அன்பான புள்ளைங்கோ.. மஜா பண்றோம்.. சென்னை தமிழில் பொளந்துகட்றது இவர்தான்!
சென்னை: தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ள கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் அதற்குள்ளேயே சென்னை செந்தமிழில் அசத்த தொடங்கிவிட்டார்.
தமிழ்த் திரைத்துறையின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் தனது 58வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்ககப்படவில்லை.
அதனால் சியான் 58 என்று படத்தின் பெயர் குறிப்பிடப்படுகிறது. இப்போதுதெல்லாம் நடிகர்களின் செல்லப் பெயரில் எத்தனையாவது படம் என்பதை சேர்த்து குறிப்பிடுகின்றனர்.

அஜய் ஞானமுத்து
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தான் படத்தின் பெயரை தெரிவிப்பதுதான் ட்ரென்ட். இந்நிலையில் சியான் விக்ரம் 58 படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.

இர்ஃபான் பதான்
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரரான இர்ஃபான் பதான் இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் இயக்குநரான அஜய் ஞானமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
சென்னை செந்தமிழ்
இந்நிலையில் தான் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ள இர்ஃபான் பதான் அசத்தும் சென்னை செந்தமிழில் நன்றி தெரிவித்து டிவிட்டியிருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது,
என் அன்பான புள்ளைங்கோ எல்லாத்துக்கும் வணக்கம், நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி. நடிகர் விக்ரம், இசைப்புயல்
ஏஆர் ரஹ்மான் மற்றும் இயக்குனர்
அஜய் ஞானமுத்து உடன் சியான் 58 படத்தில் இணைய ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்களுடைய ஆதரவு தொடரட்டும், நன்றி.. மஜா பண்றோம்.. என தெரிவித்திருக்கிறார்.
உயரத்துக்கு கொண்டு வரும்
வழக்கமாக ஹர்பஜன் சிங்தான் அவ்வப்போது தமிழில் டிவிட்டி அசத்துவார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ள இர்ஃபான் பதான் தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் தமிழில் டிவிட்டியிருக்கிறார். இர்ஃபானின் இந்த டிவிட்டை பார்த்த ரசிகர்கள் 'உங்களை வாழ்த்த புள்ளிங்கோ இருக்காங்க.. தமிழ் சினிமா உங்களையும் பெரிய உயரத்துக்கு கொண்டு வரும்!!' என தெரிவித்துள்ளனர்
வாழ்க தமிழ்
மேலும் இர்ஃபானின் இந்த தமிழ் டிவிட்டை பார்த்த மற்றொரு ரசிகர் 'நீங்களுமா எங்கள் அண்ணன்
ஹர்பஜன் சிங் சிங்கம் மாதிரி ஆயிட்டீங்க வாழ்க தமிழ் வளர்க தமிழ் எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











