lal salaam: கெத்தா களமிறங்கும் லால் சலாம்.. டப்பிங்கை முடித்த கபில்தேவ்!
சென்னை: ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் லால் சலாம் படம் குறித்த மிரட்டலான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

இவருடைய காட்சி படத்தில் இருபது நிமிடம் இடம்பெறும் என கூறப்படுகிறது அந்த திரைப்படத்தில் விஷ்ணு - விஷால் விக்ராந்த் ஆகியோர் நாயகர்களாக நடிக்கின்றனர்.
லால் சலாம்: கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் மதத்தை மையமாக வைத்து நடக்கும் அரசியலை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டதாக சமீபத்தில் செய்தி வெளியாகி படம் ஜனவரி 26 படம் தள்ளிப்போவதாக செய்தி வெளியானதால், படம் வெளியாகுமா வெளியாகாதா என்ற கேள்வி எழுந்தது.
கேப்டன் மில்லர்: ஏனென்றால் தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய திரைப்படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகின்றன. இதனால் விஷ்ணு விஷால் - விக்ராந்த் ஹீரோவாக நடித்திருக்கும் படம் வெளியாகுமா என்ற சந்தேகத்தை திரைத்துறையினர் எழுப்பி வந்தனர்.

மாஸ் அப்டேட்: இந்த நிலையில், லால் சலாம் படம் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, லால் சலாம் படத்தின் டப்பிங் பணியை கபில்தேவ் நிறைவு செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக படக்குழு பகிர்ந்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இசைவெளியீட்டுவிழா: லைகா புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் ரஜினிகாந்தின் மொய்தீன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதால், இந்த படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் மாதம் 20ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











