கிரீன் சிக்னல் தந்த பெற்றோர்.. இந்திய கிரிக்கெட் வீரரை மணக்கும் பிரபல நடிகை.. டிசம்பரில் கல்யாணம்
Recommended Video
மும்பை: இளம் நடிகை அஷ்ரிதா ஷெட்டி, பிரபல கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சித்தார்த் நடித்த உதயம் என்.எச் 4 படத்தில் ஹீரோயினா நடித்தவர் இளம் நடிகை அஷ்ரிதா ஷெட்டி. ஒரு கன்னியும் மூணு களவானிகளும், இந்திரஜித் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

மும்பையை சேர்ந்த அஷ்ரிதா ஷெட்டியும், இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். பெங்களூருவை சேர்ந்த மனிஷ் பாண்டே இந்தியாவுக்காக இதுவரை 23 ஒரு நாள் போட்டிகளிலும், 31 டி20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.
இந்நிலையில் அஷ்ரிதா ஷெட்டி, மனிஷ் பாண்டே காதலுக்கு அவர்களது பெற்றோர் பச்சைக்கொடி காட்டியுள்ளனர். இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் இவர்களது திருமணம் நடைபெறும் என தெரிகிறது.
மும்பையில் நடைபெறெ உள்ள திருமண விழாவில் ஏராளமான கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா வரிசையில், மனிஷ் பாண்டே - அஷ்ரிதா ஷெட்டி ஜோடி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications