Don't Miss!
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- News
காற்றழுத்த தாழ்வு மண்டலம்..தமிழ்நாட்டில் 29 முதல் இடி மின்னலுடன் மழை..சூறாவளியும் வீசுமாம்
- Finance
அதானி குழுமத்தின் டாப் 5 நிறுவனங்களின் கடன் எவ்வளவு.. PSU வங்கிகள், தனியார் வங்கிகளில் எவ்வளவு?
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Lifestyle
சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு...
- Technology
உஷார்.! 5G ஆபத்தானதா? இவ்வளவு மறைமுக பாதிப்பு இருக்கிறதா? IPS அதிகாரிகள் சொன்ன உண்மை.!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஹாப்பி பர்த்டே தலைவா ... சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து சொன்ன சச்சின் டெண்டுல்கர்!
மும்பை : சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
நடிகர், நடிகைகள் மட்டுமின்றி இந்திய அளவில் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது நடந்தால் எழுதுவேன்...சுயசரிதை எழுதுவது குறித்து ரஜினி

சூப்பர்ஸ்டார் பிறந்தநாள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பிறந்த நாளை இன்றைய தினம் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு இணையதளம் மூலம் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. சக நடிகர்கள், நடிகைகள் மட்டுமின்றி இந்திய அளவில் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரஜினிகாந்திற்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் பகிர்ந்துள்ளார். ஹாப்பி பர்த்டே தலைவா என்று அவர் குறிப்பிட்டுள்ளது ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.

மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை
மேலும் எப்போதும் ரஜினியின் ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கையில் சிறப்பான மகிழ்ச்சிக்கும் தான் பிரார்த்தித்து வருவதாகவும் சச்சின் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி
இதையொட்டி ரசிகர்கள் பலரும் அவரது ட்வீட்டிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சச்சின் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து உள்ள புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

பெருமைக்குரிய கிரிக்கெட்டர்
இந்தியாவின் பெருமைக்குரிய கிரிக்கெட்டராக விளங்கி வருகிறார் சச்சின் டெண்டுல்கர். இவர் அதிக அளவில் ஸ்கோர் செய்து இந்திய அணியின் சிறப்பான முன்னாள் பேட்ஸ்மேனாக பார்க்கப்படுகிறார். இந்நிலையில் அவர் பலரது பிறந்தநாள் உள்ளிட்டவற்றை நினைவில் கொண்டு வாழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.