கியூட்.. பிரபல நடிகையை புகழ்ந்த கிரிக்கெட் வீரர்..நடிகை ஆச்சர்யம்.. கலாய்க்கும் ரசிகர்கள்!
மும்பை : ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் பிரபல நடிகையை புகழ்ந்தது இணையத்தில் டிராண்டாகி வருகிறது.

மாடல் அழகியான பிரியங்கா ஜவல்கர், 2017ஆம் ஆண்டு வெளியான காலா வரம் ஆயே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், அந்த திரைப்படத்தை அடுத்து விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான டாக்சிவாலா படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது, திம்மரசு, கமணம் உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார் பிரியங்கா ஜவல்கர்.

திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியங்கா, இணையத்தில் ஏராளமான ரசிகர்களை வைத்து இருக்கிறார்.இதனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். இவர் பதிவிடும் புகைப்படங்கள், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாவதும் உண்டு.

பிரியங்கா ஜவல்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த இளம் கிரிக்கெட் வீரரான வெங்கடேஷ் ஐயர், பிரியங்காவின் புகைப்படத்திற்கு "Cute" என கமெண்ட் செய்துள்ளார். இதனை கவனித்த பிரியங்கா ஜவல்கர், "யாரு? நீங்களா?" என ரிப்ளை செய்துள்ளார். இது தொடர்பான ஸ்க்ரீன்ஷாட்கள், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகத் தொடங்கி உள்ளது. ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை நெட்டிசன்ஸ்கள் சரமாரியாக கிண்டடிலத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











