இன்று சிஎஸ்கே மேட்ச்சின்போது அறிவிக்கப்படும் ஆர்ஜே பாலாஜி அரசியல் என்ட்ரி!
Recommended Video

சென்னை : ஆர்ஜே.பாலாஜி அரசியலில் களமிறங்குகிறார் என்ற சுவர் விளம்பரம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த விளம்பரத்தில் 'இளைஞர்களை வழிநடத்த தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி அவர்களை வரவேற்கிறோம்' என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.
தனது கட்சிக் கொடியின் புகைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி ஃபேஸ்புக், ட்விட்டரில் வெளியிட்டு இன்னும் பரபரப்பைக் கூட்டினார். ஆனால், அது அரசியல் கட்சி அறிவிப்பு அல்ல, கன்னடத்தில் வெளியான 'ஹம்புல் பொலிட்டிஷியன் நொக்ராஜ்' எனும் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பவிருப்பதாக தகவல் வெளியானது.

அரசியல் படத்தின் ப்ரொமோஷனுக்காக அரசியல் கட்சி விளம்பர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதிதாக ஒரு ட்வீட் போட்டு இன்று கிரிக்கெட் வீரர்கள் தனது அடுத்தகட்ட நகர்வை அறிவிக்கவிருப்பதாகக் கூறியுள்ளார்.
ஆர்ஜே-வான பாலாஜி காமெடியனாக படங்களில் நடித்து வருகிறார். பல பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்து வரும் ஆர்ஜே பாலாஜி, ஐபிஎல் போட்டிகளுக்கு வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.
நேற்று பதிவிட்ட ட்வீட்டில்,"உங்கள் அனைவரது பேராதரவிற்கும், பேரன்பிற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். மே 18ம் தேதி ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியின் போது கிரிக்கெட் வீரர்கள் இரவு 7 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் எனது அடுத்தகட்ட பயணத்தை அறிவிக்க உள்ளார்கள்" எனத் தெரிவித்துள்ளார். வணக்கம், நன்றி ஆகிய எழுத்துகளை கட்சி கொடி நிறத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சிஎஸ்கே மேட்ச் என்றாலே வழக்கமான கொண்டாட்டம் இருக்கும். இன்று ஆர்ஜே பாலாஜி பற்றிய அறிவிப்பும் வெளியாகவிருப்பதால் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம். யார் அறிவிக்கப்போவது என்பதை சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.


Click it and Unblock the Notifications











