Just In
- 2 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 2 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 5 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 6 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- News
திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி
- Automobiles
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Lifestyle
கோதுமை ரவை பாயாசம்
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
போதைக் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? கைது செய்யப்பட்ட நடிகையிடம் தீவிர விசாரணை!
இடுக்கி: போதைப் பொருள் விற்கும் கும்பலுடன் ஏற்பட்ட தொடர்பு பற்றி, கைது செய்யப்பட்ட நடிகையிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக, பெங்களூரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாற்றப்படுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேரம்? தீயாய் பரவும் தகவல்.. குழப்பத்தில் ரசிகர்கள்!
இந்த விவகாரத்தில் கர்நாடகாவில் சிலர் கைது செய்யப்பட்டனர். சினிமா துறையை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்

சஞ்சனா கல்ராணி
நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் சஞ்சனாவுக்கு சமீபத்தில் ஜாமீன் கிடைத்தது. பாலிவுட்டில் நடிகை ரியா சக்கவர்த்தி உட்பட சில பிரபலங்கள் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

சாரா அலிகான்
தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் உட்பட சில நடிகைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். போதைப் பொருள் வழக்கில் கேரளாவைச் சேர்ந்த சிலர் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக, கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் மகன் பினீஷ் கொடியேறி கைது செய்யப்பட்டார்.

அதிரடி ரைடு
இந்நிலையில், கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலைப்பிரதேசமான வாகமண் பகுதியின் ரிசார்ட் ஒன்றில் போதைப் பார்ட்டி நடப்பதாக கேரள கிரைம் பிராஞ்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கடந்த சில நாட்களுக்கு முன், அவர்கள் அங்கு அதிரடி ரைடு நடத்தினர். அதில் ஏழு வகையான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

நடிகர், நடிகைகள்
அங்கு மலையாள சினிமாவைச் சேர்ந்த சில நடிகர், நடிகைகள் வருவதாக இருந்தது.
ரைடு பற்றிய தகவல் சென்றதை அடுத்து அவர்கள் தப்பி விட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அங்கு கைப்பற்ற போதைப் பொருட்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டது என்று போலீசார் அறிந்தனர்.

பிரிஸ்டி பிஸ்வாஸ்
இதையடுத்து தொடுபுழாவைச் சேர்ந்த அஜ்மல் ஜாகீர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் வளர்ந்து வரும் நடிகை, பிரிஸ்டி பிஸ்வாஸ். இவர் சில மலையாளப் படங்களில் நடித்துள்ளார். மாடலிங் செய்தும் வருகிறார். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலிவுட் பிரபலங்கள்
இது, மலையாள சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஜ்மல் மற்றும் சல்மான் ஆகியோரிடம் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார் நடிகை பிரிஸ்டி. இதனால், வேறு சினிமா துறையினருக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா என்பது பற்றி அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

போதை பார்ட்டி
அதோடு பிரிஸ்டிக்கும் இவர்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது, பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர். நடிகை பிரிஸ்டி, ஏற்கனவே பல பகுதிகளில் இந்தக் கும்பல் நடத்திய போதைப் பொருட்கள் பார்ட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறார் என்றும் மாநிலத்துக்கு வெளியிலும் அவருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருவதாகக் கூறியுள்ளனர்.