காதலுக்கு எதிர்ப்பு.. கடத்தல்காரியாக மாறிய நடிகை..கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
சென்னை: காதல் வந்துவிட்டால் கண்ணும், தெரியாது மண்ணும் தெரியாது என்று சொல்லுவார்கள். அப்படி காதல் வலையில் சிக்கிய நடிகை, தனது காதலுக்காக கடத்தல்காரிய மாறி தற்போது கம்பி எண்ணிக்க்கொண்டு இருக்கிறார். மகாராட்டிராவில் நடந்துள்ளது இந்த சம்பவம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மராட்டிய மாநிலம் பால்கார் மாவட்டத்தில் வசித்து வருபவர் தான் பிரிஜேஷ் சிங், இவரை நடிகை ஷப்ரீன் என்பவர் காதலித்து வருகிறார். இதில் ஷப்ரீன் கிரை ம் பேட்ரல் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.பல ஆண்டுகளான இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வருகின்றனர். இவர்கள் காதல் விவகாரம் குடும்பத்திற்கு தெரிந்த போதும், பஇருவரும் வேறு வேறு சமூகத்தினர் என்பதால் இரு வீட்டிலும் இவர்களுடை ய திருமணத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

காதல் கதை: ஆனால்,ஷப்ரீன் கட்டினால் பிரிஜேஷ் சிங்கைத்தான் கட்டுவேன் என வீட்டில் முரண்டுபிடித்ததால்,ஷப்ரீனின் பெற்றோர் திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டனர். ஆனால், பிரிஜேஷ் சிங், வீட்டில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.இதனால், கடுமையான மன உளைச்சலில் ஷப்ரீன் இருந்துள்ளார். இந்த நேரத்தில் தான் பிரிஜேஷின் மூன்றரை வயது உறவுக்கார சிறுவன் காணாமல் போகிறான். அவனை பல இடத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்காதால் அவனின் பெற்றோர் வாலிவ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர்.
அதீத காதல்: இதையடுத்து, போலீசார் சிறுவன் காணாமல் போன பள்ளிக்கு சென்று விசாரணை நடத்த,.அப்போது சிறுவனை ஒரு பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கூறி அழைத்து சென்றதாக கூறினர். இதையடுத்து,போலீசார் பள்ளியில் இருந்த சிசிடிவியை ஆய்வு செய்த போது, அந்த சிறுவனை கடத்தியது ஷப்ரீன் என்பது தெரிய வருகிறது. இதையடுத்து போலீசார், பாந்திரா பகுதியில் வைத்து, ஷபரீனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், நானும் பிரிஜேஷ் பல ஆண்டுகளாக காதலித்து வருகிறோம் எங்கள் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர் ஒத்துக்கொள்ளவில்லை.இதனால், சிறுவனை கடத்திவைத்து அவர்களை மிரட்டி திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.
இதையடுத்து, சிறுவனின் பள்ளிக்கு சென்று அழைத்தேன் அவனுக்கு ஏற்கனவே என்னை தெரியும் என்பதால், அடம்பிடிக்காமல் என்னுடன் வந்துவிட்டான். தற்போது சிறுவன் பிளாட்டில் பாதுகாப்பாக இருக்கிறான் என்று வாக்கு மூலம் கூறியுள்ளார். இதையடுத்து, போலீசார், அந்த பிளாட்டுக்கு சென்று சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
விபரீத முடிவு: இதுகுறித்து பேட்டி அளித்த மூத்த காவல் அதிகாரி ஜெயராஜ் ராணா வானே, நடிகை ஷப்ரீன் தனது காதலன் மீது அதீத காதல் வைத்து இருப்பதால் இந்த விவரீதம் நடந்துள்ளது. பிரிஜேசும், ஷப்ரீனும் பல ஆண்டுகளாக தொடர்பில் உள்ளனர். ஆனால், எவ்வளவோ முயன்றும் அவரை திருமணம் செய்து கொள்ள முடியாததால் இந்த விபரீத முடிவை எடுத்தள்ளார். இந்த விஷயத்தில் ஷப்ரீனின் காதலன் பிரிஜேஷிடமும், அவரின் குடும்பத்தினரிடமும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்குமாறு அறிவுரை கூறி இருக்கிறோம்.
மேலும், நடிகை ஷப்ரீன் மன அழுத்தத்தில் இருப்பதால் அவருக்கு மருத்துவரின் உதவி தேவை அதற்கான ஏற்பாடும் செய்து இருக்கிறோம், மேலும், அவருக்கு அறிவுரையும் கூறி இருக்கிறோம் என்று காவல் அதிகாரி ஜெயராஜ் ராணா வானே தெரிவித்துள்ளார்


Click it and Unblock the Notifications











