பிரியாமணியின் திருமணம் செல்லாது...வழக்கு தொடர்ந்த முஸ்தஃபாவின் முதல் மனைவி

சென்னை : கண்களால் கைது செய் படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியாமணி. தனுஷ், விஷால் போன்ற பல ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். கார்த்தியுடன் இவர் இணைந்து நடித்த பருத்தி வீரன் படம் இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றுத் தந்தது.

பிரியாமணி, 2017 ல் முஸ்தஃபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வருகிறார். தி ஃபேமினி மேன் வெப் சீரிசின் மூன்று பாகங்களிலும் நடித்துள்ளார் பிரியாமணி.

 பிரியாமணி மீது வழக்கு

பிரியாமணி மீது வழக்கு

இந்நிலையில் பிரியாமணி, முஸ்தஃபாவின் திருமணம் செல்லாது என முஸ்தஃபாவின் முதல் மனைவியான ஆயிஷா என்பவர் கோர்ட்டில் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், சட்டப்படி பிரியாமணி - முஸ்தஃபா திருமணம் நடந்ததாக கூறப்படும் தேதி வரை தான் முஸ்தஃபாவுடன் வாழ்ந்ததாக கூறி உள்ளார்.

திருமணம் செல்லாதா

திருமணம் செல்லாதா

முஸ்தஃபா - ஆயிஷாவிற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் பிரியாமணியை அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த திருமணம் சட்டப்படி செல்லாது எனவும் ஆயிஷா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி முஸ்தஃபா மற்றும் பிரியாமணிக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

முதல் மனைவி குற்றச்சாட்டு

முதல் மனைவி குற்றச்சாட்டு

இது பற்றி ஆயிஷாவிடம் கேட்ட போது, இதுவரை தன்னிடம் இருந்து முஸ்தஃபா சட்டப்படி விவாகரத்து பெறவில்லை. விவாகரத்து பெறாமலேயே பிரியாமணியை திருமணம் செய்து கொண்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

மறுக்கும் முஸ்தஃபா

மறுக்கும் முஸ்தஃபா

ஆனால் ஆயிஷாவின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என முஸ்தஃபா மறுத்துள்ளார். குழந்தைகளின் பராமரிப்பிற்காக தான் தொடர்ந்து பணம் கொடுத்து வருவதாகவும், ஆயிஷா தன்னிடம் இருந்து பணம் பறிப்பதற்காக இப்படி செய்கிறார் என தெரிவித்துள்ளார்.

Recommended Video

Priyamani செய்துகொண்ட திருமணத்தால் நடந்த சோகம் | கண்ணீர் விட்ட Priyamani | Family Man 2
ஆயிஷா அமைதியாக இருந்தது ஏன்

ஆயிஷா அமைதியாக இருந்தது ஏன்

அத்துடன், ஆயிஷாவும் நானும் 2010 முதல் பிரிந்து வாழ்கிறோம். 2013 ல் விவாகரத்து பெற்றோம். நான் 2017 ல் தான் பிரியாமணியை திருமணம் செய்து கொண்டேன். அப்படி எங்கள் திருமணம் சட்ட விரோதமானது என்றால் இத்தனை காலம் ஆயிஷா அமைதியாக இருந்தது ஏன் என கேட்டுள்ளார்.

மவுனம் காக்கும் பிரியாமணி

மவுனம் காக்கும் பிரியாமணி

ஆனால் இந்த பிரச்சனையை தான் தொடர்ந்து எழுப்பி வந்ததாகவும், வெளியில் சொல்ல விடாமல் முஸ்தஃபா தான் தன்னை தடுத்து வைத்திருந்ததாகவும் கூறி உள்ளார். வழக்கு தொடரப்பட்டுள்ளது உண்மை தான் என முஸ்தபாஃவின் வழக்கறிஞரும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த வழக்கு விவகாரம் பற்றி பிரியாமணி தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X