கோக்கை வைத்து சம்பவம் செய்த கிறிஸ்டியானோ ரொனால்டோ.. விஜய்யின் கத்தி படத்தை நினைவுப்படுத்துகிறதா?

சென்னை: கிறிஸ்டியானோ ரொனால்டோ கொகோ கோலாவை வச்சு செய்த சம்பவம் விஜய்யின் கத்தி படத்தை நினைவுப்படுத்துவதாக உள்ளது.

யூரோப்பியன் சாம்பியன்ஷிப் போட்டியை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன்பாக தனது டேபிளில் வைக்கப்பட்டிருந்த கொகோ கோலா பாட்டிலை கேமரா ஃபிரேமுக்குள் வராதப்படி எட்டி தள்ளி வைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

பெரும் பரபரப்பு

பெரும் பரபரப்பு

மேலும் வாட்டர் பாட்டிலை எடுத்துக்காட்டி வாட்டர் என்று கூறியபடியே தனக்கு முன்னால் வைத்து செய்தியாளர் சந்திப்பை தொடங்கினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

30ஆம் கேடி இழப்பு

30ஆம் கேடி இழப்பு

கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்த இந்த சம்பவத்தால் கொகோ கோலா நிறுவனத்திற்கு ஒரே நாளில் 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்த இந்த சம்பவம் கத்தி படத்தில் விஜய் செய்த சம்பவத்தை நினைவுப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் செய்த சம்பவம்

விஜய் செய்த சம்பவம்

நடிகர் விஜய் 2000ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை கொகோ கோலா நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்தார். ஆனால் 2014ஆம் ஆண்டு அவர் நடித்த கத்தி படத்தில் கொகோ கோலா நிறுவனத்திற்கு எதிராக வசனம் பேசி தெறிக்க விட்டார்.

ஜீவானந்தம் கதாபாத்திரம்

ஜீவானந்தம் கதாபாத்திரம்

இதுதொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் கோலா நிறுவனத்தை விமர்சிக்கவில்லை. ஜீவானந்தம் கதாப்பாத்திரமாகதான் கத்தி படத்தில் நடித்தேன் என விளக்கம் கூறினார் விஜய்.

ஏஆர் முருகதாஸ்

ஏஆர் முருகதாஸ்

இந்நிலையில் இந்த சம்பவத்தைதான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் செயலும் நினைவுப்படுத்துவதாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கத்தி படம் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: kaththi vijay
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X