twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமா நூற்றாண்டு விழா... திரும்பிய பக்கமெல்லாம் அதிருப்தி முணுமுணுப்புகள்!

    By Shankar
    |

    சென்னை: இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் நாளையோடு முடிவுக்கு வருகின்றன.

    ஆனால் இந்த விழாவால் திரையுலகினரிடையே ஏற்பட்டுள்ள கசப்புகள், அதிருப்திகள் ஏற்பட்டுள்ளதுதான் மிச்சம்.

    அழைப்பில்லையே...

    அழைப்பில்லையே...

    தென்னிந்திய சினிமாவின் தலைநகரான சென்னையில் விழா நடக்கிறது. ஆனால் தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் பலரை அழைக்கவே இல்லை என்ற குற்றச்சாட்டுகள், விழா தொடங்கியதற்கு ஒரு நாள் முன்பிருந்தே தொடங்கிவிட்டன.

    கருணாநிதி, பாலு மகேந்திரா, ஏ ஆர் ரஹ்மான் என முக்கியமான பலருக்கு அழைப்பில்லை என்று கூறப்பட்டசு. சிலருக்கு கடைசி நேரத்தில் அழைப்பு வந்திருக்கிறது.

    தமிழ் சினிமாவும் அரசியலும்

    தமிழ் சினிமாவும் அரசியலும்

    தமிழ் சினிமாவும் அரசியலும் பிரிக்க முடியாதவை. தமிழக அரசியலிலிருந்த பலர் இயக்குநராக, வசனகர்த்தாவாக அல்லது தயாரிப்பாளர்களாக சினிமாவுக்கும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லையாம்.

    அரசு விளம்பரம்

    அரசு விளம்பரம்

    இந்த நூற்றாண்டு விழாவுக்காக வெளியிடப்பட்ட அரசு விளம்பரங்களில் தமிழ் சினிமாவின் இணையற்ற நடிகரான சிவாஜி கணேசனின் உருவப் படம் இடம்பெறவில்லை. கன்னடம், தெலுங்கு, மலையாளத்துக்கென தனித்தனி விழா எடுத்தவர்கள் தமிழ் சினிமா விழா எது என்பதையும் குறிப்பிடவில்லை. மொத்த விழாவையே தமிழ் சினிமா எடுத்ததாகவும் குறிப்பில்லை.

    இது தமிழக அரசு விழாவா, தென்னிந்திய திரைப்பட பர்த்தக சபை விழாவா என்ற தெளிவும் இல்லை. பிலிம்சேம்பர் விழா என்றால் தமிழ் சினிமா விழா எது? துவக்க நாள் விழாவா என்பது குறித்தும் தெளிவுபடுத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    படங்கள் திரையிடுவதில் பாரபட்சம்

    படங்கள் திரையிடுவதில் பாரபட்சம்

    நூற்றாண்டு விழாவையொட்டி ஒரு வாரத்துக்கு காட்டப்பட்டு வரும் இலவச சினிமாக்கள் பட்டியலில் தமிழ் சினிமாவின் உன்னதமான படங்கள் இடம்பெறவில்லை. அன்றைய சூப்பர் ஸ்டார்கள் தியாகராஜ பாகவதர், பியு சின்னப்பா, இன்றைய சூப்பர் ஸ்டார்கள் ரஜினி, கமல் போன்றவர்களின் படங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால் மகதீரா படம் மட்டும் நான்கு முறை காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஜெயலலிதா படம் மட்டும்...

    ஜெயலலிதா படம் மட்டும்...

    இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவ்வளவு பெரிய விழா மேடையில் ஜெயலலிதா படத்தை மட்டும் போட்டு நூற்றாண்டு விழா என பேனர் வைத்திருக்கிறார்கள். நூற்றாண்டு விழா சினிமாவுக்கா, ஜெயலலிதாவுக்கா என்ற கேள்விக்கு பதில் சொல்லும் துணிவு யாருக்கும் இல்லை.

    கொலைக் குற்றம் சாட்டப்பட்ட கல்யாண்

    கொலைக் குற்றம் சாட்டப்பட்ட கல்யாண்

    தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் கல்யாண் பற்றிய சர்ச்சை மிகவும் முக்கியமானது. இவர் ஆந்திராவின் பிரபல ரவுடி சூரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர். நிழல் உலக தாதாக்களுடன் தொடர்புடையவர் என்றும், அவர்களை வைத்து சினிமாவில் வல்லமை மிக்கவராக வலம் வருகிறார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது. அந்த கல்யாண், முதல்வருக்கு சமமாக மேடையில் அமர்ந்ததை எப்படி அனுமதித்தது முதல்வர் அலுவலகம் என்ற கேள்விக்கும் பதிலில்லை.

    மூத்த கலைஞர்களுக்கு அவமதிப்பு

    மூத்த கலைஞர்களுக்கு அவமதிப்பு

    நிகழ்ச்சிக்கு வந்த சாதனைக் கலைஞர்களும் சரியான முறையில் கவுரவிக்கப்படவில்லை. ரஜினி, கமல் போன்ற திரையுலகின் தூண்களும் நேற்று வந்த நடிகைகளும் சமமாகவே பார்க்கப்பட்டனர் இந்த மேடையில். ஏதோ பத்தோடு பதினொன்றாக அவர்களை அழைத்து நினைவுப் பரிசு கொடுத்ததை அவர்களின் ரசிகர்கள் ரசிக்கவில்லை.

    பத்திரிகையாளர்கள் புறக்கணிப்பு

    பத்திரிகையாளர்கள் புறக்கணிப்பு

    சினிமா தொடர்பான விழாக்களுக்கு சினிமா பத்திரிகையாளர்களைத்தான் பொதுவாக அழைப்பது வழக்கம். ஆனால் இந்த முறை அந்த வழக்கத்தை மாற்றிவிட்டார்கள். சினிமா பத்திரிகையாளர்கள் ஒருவருக்கும் இதில் அழைப்பில்லை. மாறாக தலைமைச் செயலகத்தில் உள்ள அரசியல் நிருபர்கள் சிலரை அழைத்துக் கொண்டது தமிழக அரசின் செய்தி - மக்கள் தொடர்புத் துறை. இதனால் இந்த நிகழ்ச்சியின் செய்திகளை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை.

    ஜெயா டிவி மட்டும்...

    ஜெயா டிவி மட்டும்...

    தமிழக அரசு சார்பில் விழா நடத்தப்படுவதாலும், அரசு சார்பில் விழாவுக்கு ரூ 10 கோடி கொடுக்கப்பட்டதாலும் ஜெயா டிவி தவிர மற்ற சேனல்கள் எதையும் அனுமதிக்கவில்லை அதிகாரிகள். கொடுக்கப்பட்டது மக்கள் பணம், ஜெயா டிவியின் சொந்தப் பணம் அல்ல என்ற குறைந்தபட்ச தெளிவு கூட அவர்களுக்கு இல்லை.

    வாயைத் திறந்து சொல்லணுமே..

    வாயைத் திறந்து சொல்லணுமே..

    ஆனால் இத்தனை குற்றச்சாட்டுகளையும் வாயைத் திறந்து சொல்லும் துணிவு யாருக்கும் இல்லை என்பது முக்கியமானது. எடிட்டர் லெனினின் அறிக்கை கூட, இத்தனை சொதப்பல்களுக்கும் காரணமானவரை விட்டுவிட்டு, மொக்கையாக, 'இதையெல்லாம் நான் கேட்கவில்லை, நினைத்துப் பார்க்கிறேன்,' என்று ஜகா வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    There are various allegations levelled on Indian Cinema centenary celebrations that is happening in Chennai now.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X